திண்டுக்கல். ஜுலை 2- திண்டுக்கல் மாவட்டத்தில் மலை வேடன் இனச்சான்று வழங்காமல் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்து வரும் போக்கைக் கண் டித்து ஆகஸ்ட் 10 அன்று கோட்டாட்சி யர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரும் முன் னாள் எம்எல்ஏவுமான டில்லிபாபு அறி வித்துள்ளார். தமிழ்நாடு மலைவேடன் முன் னேற்ற சங்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் தா.அஜாய் கோஷ், தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநி லத்தலைவர் டில்லிபாபு, , தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் ப.கௌதமன், மாநில பொருளாளர் எம்.ரவிச்சந்தி ரன், விவசாயிகள் சங்க மாவட்டச்செய லாளர் எம்.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 28.11.2022 அன்று மலை வேடன் இனச்சான்று கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக காத்திருப்புப் போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தையொட்டி திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற் றது. அதன்படி மாவட்ட விழிக்கண் குழு, பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த 9 பேருக்கு 15 நாட்களில் இனச் சான்று வழங்குவதாக ஒப்புக்கொண்ட னர். ஆனால் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டபடி இதுநாள் வரை இனச்சான்று வழங்கவில்லை. இந் நிலையில் திண்டுக்கல் மாவட்ட விழிக் கண் குழு முன்னாள் திண்டுக்கல் ஆட்சி யர் பரிந்துரை செய்தும் ஒப்புக் கொண்ட படி 9 பேருக்கு இனச்சான்று வழங்காமல் இழுத்தடித்ததை மலைவேடன் சங்க மும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் வன்மையான கண்டனத்தை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், கோட்டாட்சியர் நிர்வாகம். மாவட்ட விழிக்கண் குழுவை கண்டித்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மலைவேடன், காட்டு நாயக்கன் சமூக மக்களை திரட்டி முற் றுகை போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது என்று டில்லி பாபு தெரிவித்தார். (ந.நி)