districts

img

திருப்பரங்குன்றத்தையும் கவனியுங்கள்

திருப்பரங்குன்றம், ஜூலை 18- திருப்பரங்குன்றத்தில் ரயில்வே சுரங்கப்பாதை, பேருந்து நிலையம். சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி மேயர், துணை மேயர், மாநகராட்சி  ஆணையாளரை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கோவில் நகரான திருப்பரங் குன்றத்தில் வசிக்கும் மக்கள் ஊருக்கு வெளியில் புறவழிச்சாலையில் செல் வதற்கும். ஹார்விபட்டி பகுதிகளுக்கு செல்வதற்கும் நடைபாதை வசதி இல்லை. ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. திருப்  பரங்குன்றத்தில் இரட்டை ரயில் பாதை அமைய உள்ளதால், ரயில் பாதையின் இருபுறமும் சுவர் வைத்து அடைக்கும் நிலை உருவாகும். மக்கள், பள்ளிக் குழந்தைகள். கோவிலுக்கு வரும் பக்  தர்கள் கடந்து செல்வதற்கு வசதியாக சுரங்க நடைபாதை அமைத்துத்தர வேண்டும். திருப்பரங்குன்றத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து நிலை யம் இருந்தது. மேம்பாலம் அமைத்த தால் தற்போது கோவில் பேருந்து நிறுத்தம் மட்டுமே உள்ளது. எனவே தனி யாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.  திருப்பரங்குன்றம் மேம்பாலத்தின் (கடவு எண்: 371) ஒரு பகுதியில் சர்வீஸ்  சாலை போடப்படாமல் உள்ளது. சர் வீஸ் சாலக்காக கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்கி, சர்வீஸ் சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை  மேயர் தி.நாகராஜ், மாநகராட்சி ஆணையாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் பா.ரவி, திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயகுமார், எஸ்.எம்.பாண்டி, ஏ.பி.பாண்டி, முத்து ராமலிங்கம், சி.அழகுமலை ஆகியோர்  கோரிக்கை மனு அளித்தனர்.