மதுரை, ஜூலை 13- ஓபிசி தேர்வர்களுக்கு விண் ணப்ப கால நீட்டிப்பை எய்ம்ஸ் மறுப்பது சரியல்ல. எய்ம்ஸின் பதில் ஏற்கத் தக்கதல்ல என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் விமர்சித்துள் ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஐஎன்ஐ -சிஇடி (INI - CET) தேர்வுகளுக்கான விண்ணப்பத் திற்கு கூடுதல் அவகாசம் கேட்டு 12.04.2023 அன்று “எய்ம்ஸ்” தேர்வுக் கட்டுப்பாட்டு ஆணைய ருக்கு கடிதம் எழுதியிருந்தேன். தமிழ்நாட்டில் ஓபிசி சாதிச் சான்றி தழ் வழங்குவதில் உள்ள கால அளவு தேர்வர்களுக்கு சிரமத்தை உண்டு பண்ணுவதை குறிப்பிட்டு இருந்தேன். ஓபிசி சாதிச்சான்றித ழில் உள்ள வருமான வரம்பு (Creamy layer) காரணமாக ஒவ் வோர் ஆண்டும் ஏப்ரல் 1 இல் இருந்தே வழங்கப்படுவதால் தேதி நீட்டிப்பு கேட்டிருந்தேன். ஏப்ரல் 10 அன்று கடைசித் தேதி இருந்ததால் பல விண்ணப்பதாரார்கள் சிரமப்பட்டார்கள். இதற்கு பதில் அளித்துள்ள “எய்ம்ஸ்” தேர்வுப் புல இணை டீன் டாக்டர் நவீன் கே. விக்ரம் 27.6. 2023 தேதியிட்ட கடிதம் மூலம் பதில் எழுதியுள்ளார். அதில், 1) 2023 ஏப்ரல் 10 அன்று கடைசித் தேதி முடிந்த பின்னரே நாடாளு மன்ற உறுப்பினரின் கடிதம் கிடைத்தது. 2) உச்சநீதிமன்றம் சில காலக் கெடுகளை விதித்துள்ளதால் தேர்வு அட்டவணையை நீட்டிக்க இயலாது. 3) மொத்தம் விண்ணப்பித்த வர்கள் 59,520. ஓபிசி விண்ணப்ப தாரர்கள் 17,835. மொத்தம் தேர்வு பெற்றவர்கள் 31,432. ஓ.பி.சி தேர்வு பெற்றவர்கள் 10,921 என்று குறிப்பி டப்பட்டுள்ளது. இந்த பதில் ஏற்கத்தக்கது அல்ல. 1) எனது கடிதம் தாமதம் என்பது காரணமாக இருக்க இயலாது.
எனது கவனத்திற்கு ஒரு பிரச் சனை கொண்டு வரப்படும் போது தான் அதை எடுக்க முடியும். மேலும் விண்ணப்பத் தேதி முடிந்து இரண்டாவது நாளே எழுதினேன். அதற்கு பிறகு ஒரு வாரம் நீட்டிப்பு தந்திருந்தால் கூட தேர்வுக்கு முன்பு 20 நாள் அவகாசம் இருந்திருக் கும். 2) இது தனிப்பட்ட தேர்வர் களுக்கு கேட்கப்பட்ட சலுகை அல்ல. ஒரு சமூகக் குழுவுக்கு ஏற் படுகிற நியாயமான பிரச்சனைக்கு கேட்கப்பட்ட கால நீட்டிப்பு. நீதி மன்றம் முன்பாக விளக்கம் அளிக்க முடியும். 3) ஓ.பி.சி. தேர்வு பெற்றவர்கள் எண்ணிக்கையை தருவது இட ஒதுக்கீடு நிரப்பப்பட்டுவிட்டது என்ற சித்திரத்தை தருகிற நோக் கத்தை கொண்டது. இது இட ஒதுக்கீட்டின் சாரம் குறித்த தவறான புரிதல். சில விண்ணப்பங்கள் திறந்த போட்டியில் கூட இடம் பெற்றிருக்கிற வாய்ப்பு உண்டு. இன்னொன்று விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிற பிரச்சனை இது. ஆகவே எய்ம்ஸ் இந்த கார ணங்களை கருத்தில் கொண்டு எதிர் காலத்திலாவது அட்டவணையை உரிய வகையில் தயாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.