districts

img

சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் விவசாயத்தொழிலாளர் சங்கம் போராட்டம்

சிவகங்கை, செப்.6- 12 கிராம மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கும் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்போருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி சிவகங்கை தாலுகா அலு வலகத்தில் அகில இந்திய விவ சாயத்தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. சிவகங்கை தாலுகா நாம னூர், கீழப்பங்குடி, திருமலை,  சுண்ணாம்பு காளவாசல், சாஸ்திரி தெரு, சக்கந்தி, மேல வாணியங்குடி, வீழநெறி சாலூர், மலம்பட்டி, இடையமேலூர் ஆகிய கிராமங்கள் உள்ளிட்ட 20-க்கும்  மேற்பட்ட கிராமங்களில் குடி யிருக்கும் வீடுகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்றும் வீட்டுமனை பட்டா இல் லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி சிவகங்கை தாலுகா அலு வலகம் முன்பாக நடைபெற்ற காத்திருக்கும் போராட்டத்திறகு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் மணி யம்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் முத்து கருப்பன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் உலக நாதன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விஸ்வ நாதன் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். போராட்டக்கா ரர்களுடன் வட்டாட்சியர் தங்கமணி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், மனுக்கள் மீது உரிய நட வடிக்கை மேற்கொள்வோம். தகு தியான அனைவருக்கும் வீட்டு மனை பட்டா கட்டாயம் வழங்கு வோம் என்று வட்டாட்சியர் உறுதி யளித்தார். கிராம மக்களிடம் மனுக் கள் தொடர்பாக கேட்டறிந்தார். இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் குடியிருந்து வருகிற மக்  கள் குறித்த புகைப்படத்தை வட்  டாட்சியரிடம் காண்பித்து சிபிஎம்  மாவட்டச் செயலாளர் தண்டி யப்பன் விளக்கிச் சொன்னார். பிஎம்ஒய் திட்டத்தில் வீடு ஒதுக்கி  கொடுத்தால் சுலபமாக வீட்டுமனைப் பட்டா வழங்கலாம் என வட்டாட்  சியர் தங்கமணி தெரிவித்தார்.  போராட்டத்தில் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர், இரு நூறு பெண்கள் உள்ளிட்ட 300 பேர்  பங்கேற்றனர்.