மாற்றுத்திறனாளிகள் கிளை அமைப்பு
மதுரை, அக்.10- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் பாதுகாப்போர் சங் கத்தின் அமைப்புக் கூட்டம் மதுரை திடீர்நகரில் ஞாயி றன்று நடைபெற்றது. மதுரை மாநகராட்சி 23- ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தி. குமரவேல், மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி யின் பகுதிக்குழுச் செயலாளர் பி. ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர் பி .கோபிநாத் தீடீர் நகர் செயலாளர் ரவி . தோழர் புலவர் என்ற வெங்கடசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைப்புக் கூட்டத்தில் தலைவராக இளை யராஜா, செயலாளராக மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
விவசாயத் தொழிலாளர்கள் மாநாடு
தேனி, அக்.10- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தேவாரம் ஏரியா மாநாடு பண்ணைபுரத்தில் திங்களன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு ராஜேந்திரன் தலைமை வகித்தார் .அஞ்சலி தீர்மானத்தை கே.சுருளிவேல் வாசித்தார். பிரதிநிதிகளை வரவேற்று கே.முருகேசன் பேசினார். மாவட்டத் தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலச் செயலாளர் ஏ. வி. அண்ணாமலை நிறைவு செய்து பேசினார் . மாநாட்டில் ஏரியா தலைவராக எஸ்.ராஜேந்திரன், செயலாளராக ஏ.பெருமாள், பொருளாளராக எஸ்.பி.ரத்தி னம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏரியா செயலாளர் டி. ராஜா, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், எஸ்.சுருளிவேல். ஆகியோர் வாழ்த்திப் பேசினர்
சிவகங்கை ஆட்சியரிடம் விவசாயத் தொழிலாளர் கோரிக்கை
சிவகங்கை, அக்.10- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா முப்பை யூர் கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாவை அள வீடு செய்து, வீடு கட்டிக் கொடுக்க வேண்டுமென விவசா யத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மணி யம்மா, மாவட்டத்தலைவர் பொன்னுசாமி, மாவட்ட துணைச் செயலாளர் முத்துகருப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர்.
ரயில் சரக்கு போக்குவரத்து வருமானம் 170 கோடியாக உயர்வு
மதுரை, அக்.10- மதுரை ரயில்வே கோட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து உரம், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் ஆகியவை யும் வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்களும் சரக்கு ரயில் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த சரக்கு போக்குவரத்து வாயிலாக மதுரை கோட்டம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை ரூ. 170 கோடி வருமானம் ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் சரக்கு போக்குவரத்து வருமானம் ரூ.128.44 கோடியாக இருந்தது. கடந்த ஆறு மாத காலத்தில் சரக்கு போக்கு வரத்து வருமானம் 32.38 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 413 சரக்கு ரயில்களில் மதுரை கோட்டத்திலிருந்து சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. தற்போது இது 614 சரக்கு ரயில்களாக உயர்ந்துள்ளது என தென்னக ரயில்வேயின் செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
இராமேஸ்வரம் - மதுரை இடையே சிறப்பு ரயில்
மதுரை, அக்.10- பயணிகளின் வசதிக்காக இராமேஸ்வரம்-மதுரை இடையே கூடுதலாக வாரத்திற்கு மும்முறை சிறப்புக் கட்டண ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கிறது. பயணி களின் வசதிக்காக இந்த ரயில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறி வித்துள்ளது. இந்த விரைவு ரயிலுக்கு இராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு ரூ.70, இராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு ரூ.55, பரமக்குடியில் இருந்து மதுரைக்கு ரூ. 45, மானாமதுரையில் இருந்து மதுரைக்கு ரூ. 30 கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது.
போடி ரயில்வே கேட்டில் பணி 3 மணி நேரம் போக்குவரத்துக்கு தடை
போடி, அக்.10- மதுரை-போடி அகலரயில்பாதை பணி தேனி வரை முடி வடைந்துள்ளது. தற்போது மதுரையில் இருந்து தேனி வரை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. போடியில் இப்பணி முடிவடைந்து வரும் நிலையில் தற்போது போடி இரட்டை வாய்க்கால் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் இதற்கான பணிநடைபெற்று வருகிறது. ஆகவே இன்று (செவ்வாய்) இரவு 11 மணியில் இருந்து புதன்கிழமை அதி காலை 2 மணி வரை ரயில்வே கேட் பகுதியில் போக்கு வரத்துத் தடை செய்யப்பட்டுள்ளதாக என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாலிபர் சங்க கிளை மாநாடுகள்
சிவகங்கை, அக்.10- சிவகங்கை மாவட்டம் அரசனி, கருங்காலக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கதின் கிளை மாநாடு கள் நடைபெற்றது. அரசனி கிளைத் தலைவராக முனீஸ்வ ரன், செயலாளராக அருண்குமார், பொருளாளராக ராஜ் குமார், துணைத் தலைவராக செல்வமணி, துணைச் செயலாளராக சுதாகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கருங்காலக்குடி கிளைத் தலைவராக ராம கிருஷ்ணன், செயலாளராக வன்னிமுத்து, பொருளாள ராக சங்கர், துணைத்தலைவராக சரண்ராஜ், துணைச் செயலாளராக தர்மராஜ் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். கிளை மாநாடுகளில் மாவட்டச் செயலா ளர் சுரேஷ் கலந்துகொண்டார்.
வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
இராஜபாளையம், அக்.10- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலைய டிப்பட்டி சேர்ந்த சுந்தரேஸ்வரன் என்ற சுந்தர் (29) கூலித் தொழிலாளி. இவர் 2020- ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான திருவில்லிபுத் தூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணஜெயஆந்த் சுந்தருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.17 ஆயிரமும் அப ராதம் விதித்து திங்களன்று தீர்ப்பளித்தார்.
மூன்று நாள் சிசு உயிரிழப்பு: உறவினர்கள் முற்றுகை
வெம்பக்கோட்டை, அக்.10 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ளது தாயில்பட்டி. இங் குள்ள எஸ்.பி.எம் தெரு வைச் சேர்ந்த பாஸ்கரன் (32) மனைவி முத்துகனி (32) இவர்களுக்கு ஏழு வயதில் பெண் குழந்தை உள்ள நிலை யில் இரண்டாவது பிரச வத்திற்காக தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் கடந்த வெள்ளியன்று சேர்க்கப்பட்டார். அக்.8-ஆம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந் துள்ளது. இந்தக் குழந்தை திங்களன்று காலை திடீ ரென இறந்து விட்டது. தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் மருத்துவர்கள் சரி வர பணியில் ஈடுபடாமல் ஊழியர்கள் மட்டுமே இருந்து வந்ததாகவும், அதனால் குழந்தை இறந்து விட்டதாக வும் குற்றம் சாட்டி, 50-க்கும் மேற்பட்டோர் ஆரம்ப சுகா தார நிலையத்தை முற்றுகை யிட்டனர். தகவலறிந்து வந்த வெம் பக்கோட்டை காவல்துறை யினர் சிசுவின் உடலை உடல் கூராய்வுக்காக விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர்.
பால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தேனி, அக்.2- பால் கொள்முதல் விலை யை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்த சங் கத்தின் தேனி மாவட்டக்குழு முடிவு செய்துள்ளது. சங்கத்தின் தேனி மாவட்டக்குழுக் கூட்டம் போடியில் மாவட்டத் தலை வர் எச்.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற் றது. மாவட்டச் செயலாளர் கே.செல்வராஜ், பொருளா ளர் பி.கிருஷ்ணன் முன் னிலை வகித்தனர். கூட்டத் தில் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை பசும் பால் லிட்டருக்கு ரூ. 42,எருமை பாலுக்கு லிட்ட ருக்கு ரூ.51 உயர்த்த வேண் டும் என வலியுறுத்தி அக்.28- ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர் அலுவலகம், வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் கே. செல்வராஜ் தெரிவித்தார்.
பல்கலை.பதிவாளர் பதவிக்காலம் நீட்டிப்பு
சின்னாளபட்டி, அக்.10- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பதிவாளராக பொறுப்பு வகிக்கும் வி.பி.ஆர்.சிவக்குமாரின் பதவிக்காலத்தை ஆறு மாதத்திற்கு நீட்டித்து பல்கலைக்கழக துணை வேந்தர் (கூடுதல் பொறுப்பு) குர்மீத் சிங் உத்தர விட்டுள்ளார். பல்கலை., செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாற்றில் மூழ்கி சிறுவன் பலி
தேனி, அக்.10- தேனி அருகே அரண் மனைப் புதூர் முல்லை நகரைச் சேர்ந்த பிரேம் குமார் மகன் மணி மாறன் (16). கடந்த சனிக்கிழமை விளையாடுவதாகக் கூறிவிட்டு தனது நண்பர்களுடன் வெளியே சென்றார். அவர் வீட்டு அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்துச் செல் லப்பட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்து துறையினர் சிறுவனின் உடலை சடலமாக மீட்டனர். பழனிசெட்டி பட்டி காவல்துறையினர் விசா ரித்தனர்.
பெண் தீக்குளிக்க முயற்சி
விருதுநகர், அக்.10- விருதுநகர் அருகே உள்ள கன்னிசேரியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(48). இவரது கண வர் இறந்து விட்ட நிலையில், வங்கியில் ரூ.6 லட்சத்திற்கும் மேல் கடன் இருந்துள்ளது. எனவே, இவரது வீட்டில் வாட கைக்கு இருக்கும் நபர் ஒருவர் வங்கிக் கடனை மீட்க பணம் கொடுத்துள்ளார். அதற்கு ஈடாக முத்துலட்சுமி, தனது வீட்டின் பத்திரத்தை அந்த நபரிடம் கொடுத்துள்ளார். இருப்பினும், வீட்டை காலி செய்ய வலியுறுத்த கடன் கொடுத்த நபர், தம்மை மிகவும் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் செல்லிடப்பேசியில் பேசுவ தாகக் கூறி முத்துலட்சுமி திங்க ளன்று பெட்ரோல் கேனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திற்கு வந்திருந்தார். பின்பு, தனது உடலில் பெட்ரோலை ஊற்ற முயன்ற போது, அப்பகுதியில் செய்தி சேகரிக்க நின்றிருந்த புகைப்படக் கலைஞர் பெத்து ராஜ், முத்துலட்சுமியிடம் போராடி பெட்ரோல் கேனைப் பறித்தார். பின்பு அங்கு வந்த காவல்துறையினர் முத்து லட்சுமியிடம் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப் படும் எனக் கூறி அவரை சூலக் கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சாலை விபத்தில் ஒருவர் பலி
திருவில்லிபுத்தூர், அக்.10- வில்லிபுத்தூர் முதலியார் பட்டி தெருவில் வசிப்பவர் ராமசாமி (55). இவரது மனைவி குரு பாக்கியம் (50) சம்ப வத்தன்று மாலை குரு பாக்கியம் தனது வீட்டிலிருந்து கண வரின் பெட்டிக்கடைக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் குரு பாக்கியத்தின் மீது மோதியது இதில் பலத்த காயம் அடைந்த குரு பாக்கியம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருவில்லிபுத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
அகவிலைப்படியை ரொக்கமாக வழங்கக் கோரிக்கை
மதுரை, அக்.10- தமிழக அரசு கடந்த கால நடைமுறையை பின்பற்றி ஆசி ரியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்வை 2022-ஆம் ஆண்டு ஜூலை முதல் அறிவிக்கவேண்டும். நிலு வைத் தொகையை தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ரொக்க மாக வழங்க வேண்டுமென அரசை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டச் செயலா ளர் பெ. சீனிவாசகன் வலியுறுத்தியுள்ளார்.
தீபாவளி கூட்டம் எதிரொலி: நடமாடும் கழிப்பறை வைக்க கோரிக்கை
மதுரை, அக்.10- மதுரை நகர் சாலையோரம் மற்றும் மார்க்கெட் விற்பனையாளர் சங்கத்தினர் மதுரை மாநகராட்சி விளக்குத்தூரண் பகுதியில் நடமாடும் கழிப்பறை வைக்க வேண்டுமென மாநகராட்சி ஆணையா ளரை கேட்டுக்கொண்டுள்ளனர். மதுரை விளக்குத்தூண் பகுதிக்கு மதுரை மற்றும் பல்வேறு ஊர்களிள் இருந்து ஏராளமான மக்கள் தீபாவளிப் பண்டிகைகை முன்னிட்டு ஜவுளி மற்றும் இதர பொருட்கம் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். விளக்குத்தூண் பகுதியில் பொதுக் கழிப்பறையோ, கட்டணக் கழிப்பறையோ இல்லாத நிலையில் பெண்கள், குழந்தை கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள் கடந்தாண்டு சாலையோர வியாபாரி கள் வெண்டிங் கமிட்டி உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று விளக்குத்தூண் பகுதியில் நடபாடும் இலவச கழிப்பறை யை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து கொடுத்தது இந்த ஆண்டும். பண்டிகைக் காலத்தை கருத்தில் கொண்டு விளக்குத் தூண் பகுதியில் நடமாடும் இலவச கழிப் பறை அமைத்துக் கொடுக்க வேண்டும் என சங்கத்தின் மாவட்டப் பொதுச் செய லாளர் எஸ்.சந்தியாகு கேட்டுக்கொண்டுள்ளார்.