districts

img

பருவமழை முன்னேற்பாடு : ஆட்சியர் ஆலோசனை

திருநெல்வேலி,  மே 16- நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  வியாழக்கிழ மை கோடை மழை தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும்  தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தென்மேற்கு பருவமழை முன்னேற்பா டுகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோ சனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கனமழை பெய்ய நேரிட்டால் மழைநீர் செல்ல ஏது வாக கால்வாய்கள் அனைத்தும் தூர்வா ரப்பட வேண்டும். நீர் போக்கிற்கு தடை யாக செடி, கொடிகள் ஏதும் கால் வாய்களில் காணப்பட்டால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கனமழை யின் காரணமாக மழை நீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் நிலை ஏற்பட்டால் அதனை உடனடியாக அப்புறப்படுத்திட தேவையான மோட்டார்கள், ஜேபிசி  இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சாலைகளில் விழும் மரங்களை உட னுக்குடன் அப்புறப்படுத்திட போதுமான அளவு மரம் அறுக்கும் இயந்திரங்கள், கிரேன்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்கு மாறும், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை பார்வையிட்டு அவற்றில் உடைப்பு ஏற்படும் நிலையில் இருந்தால் உட னடியாக சரி செய்ய வேண்டும். பள்ளிக்  கட்டிடங்கள் மற்றும் பொதுக் கட்டிடங் கள் ஏதும் சேதம் அடைந்த நிலையில் இருந்தால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரா ல் தெரி விக்கப்பட்டது. மேலும் பருவமழை காலத்தில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்படாதவாறு துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப் படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்  மருத்துவர் கா.ப.கார்த்தி கேயன் தெரிவித்தார். இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், அம்பாசமுத்திரம் புலிகள் சரணாலயம் துணை இயக்கு நர் இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சேரன்மகா தேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் மரு.சுரேஷ் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

;