தேனி மாவட்டம் க.மயிலாடும்பாறை ஒன்றியத்தில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கலந்து கொண்டார் .கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், த.கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.போஸ் மற்றும் டி.ராமசாமி, கண்டமனூர் கிளை செயலாளர் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். 11 ஆண்டு சந்தா, 4 அரையாண்டு சந்தா சேகரிக்கப்பட்டது.