districts

img

சின்னாளபட்டி கூட்டுறவு சங்கங்களில் உள்ள பட்டு சேலைகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை

சின்னாளபட்டி, ஜூலை 9- சின்னாளபட்டி கைத்தறி நெச வாளர் கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள கோரா பட்டு சேலை களை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்று சின்னாளபட்டியில் கைத்தறி நெச வாளர்களிடம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ,பெரியசாமி உறுதியளித்தார்.  திண்டுக்கல் மாவட்டம் சின்னா ளபட்டியில் 8 நெசவாளர் கூட்டுறவு  சங்கங்கள் உள்ளன. நெசவா ளர்கள் கூட்டுறவு சங்கங்களில்  நெசவு நெய்யும் தொழிலாளர் களுக்கு சேலை ஒன்றுக்கு ரூ. 900 மற்றும் ரூ.1000 கூலி கொடுப்ப தற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ. 600 கொடுப்பதாக கூறப்படுகிறது. சின்னாளபட்டிக்கு நலத்திட்ட பணி களை ஆய்வு செய்ய வந்த அமைச்  சர் ஐ.பெரியசாமியிடம் கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சங்க நிர் வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், கூட்டுறவு சங் கங்களில் கோரா பட்டு சேலைகள்

 தேக்கம் அடைந்திருப்பதால் கூட்டு றவு சங்க நிர்வாகிகள் தாங்கள் நெய்யும் சேலைகளுக்கு கூலி களை குறைத்துக் கொடுக்கின்ற னர். நெசவு நெய்வதற்கு பட்டு  நூல் தர மறுக்கின்றனர். இதனால்  பெரும்பாலான கைத்தறி நெசவா ளர்கள் வேலை இழக்கும் அபாயத்  தில் உள்ளனர் என்று தெரிவித்துள் ளனர்.  கடந்த முறை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் கூட்டுறவு சங்கங்களில் கோர பட்டு சேலைகளை கொள் முதல் செய்யாமல் இருந்தபோது கூட்டுறவு துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தலை யிட்டதால் தங்கள் பிரச்சனை தீர்ந்தது. தற்போது மீண்டும் இதே பிரச்சனை உள்ளதாக கூறினர்.  அவர்களிடம் அமைச்சர் ஐ. பெரியசாமி கூறுகையில், இதனை உடனடியாக தமிழக முதல்வர் மற்றும் கைத்தறி துறை அமைச்ச ரின் கவனத்திற்கு கொண்டு சென்று  பிரச்சனையை தீர்ப்பதாக உறுதி யளித்தார். மேலும், சின்னாளபட்டி யில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை தீர்ப்பதோடு கைத்தறி நெச வாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட குறையாமல் கூலி வழங்க நட வடிக்கை எடுக்கப்படும். வீடு இல்  லாமல் தவிக்கும் கைத்தறி நெசவா ளர்களை கண்டறிந்து அவர் களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க  இடங்களை தேர்வு செய்து வரு கிறோம். ஒரு வருட காலத்திற்குள் சுமார் 300 கைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக் கும் என்றார். 

மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர்

சின்னாளபட்டியில் உள்ள 18 வார்டுகளிலும், பொதுமக்கள் மற்  றும் நெசவாளர்களை நேரில் சந் தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.  தங்கள் பகுதிக்கு தார்ச்சாலை வசதி, மற்றும் பேவர் பிளாக் கற்கள்  சாலை, வசதி கேட்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்று உட னடியாக அவற்றை நிவர்த்தி செய்ய  உத்தரவிட்டதோடு நலத்திட்ட பணி களை கண்காணிக்க வேண்டுமென  உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கூறினார்.  அருந்ததியர் காலனிப் பகுதி யில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பகுதியில் உடனடியாக தார்ச் சாலை அமைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அமைச்சர் அறி வுறுத்தினார். இந்நிகழ்வில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், சின்னாளபட்டி பேரூராட்சி மன்ற  தலைவர் பிரதிபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் செல்வராஜ், துப்புரவு ஆய்வாளர் கணேசன், தலைமை எழுத்தர் கலியமூர்த்தி ராமமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.