தேனி, ஜூன் 3- மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்,ஒன்றிய ரயில்வே அமைச் சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதை தொடர்ந்து போடி -சென்னை ,போடி -மதுரை ரயில் போக்குவரத்து ஜூன் 15 முதல் துவங்குகிறது . மதுரை-போடி இடையே இயங்கிய மீட்டர்கேஜ் ரயில் கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பரில் நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை மட்டுமே தற்போது ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தேனி வரை வரும் ரயிலையும், சென் னையில் இருந்து மதுரை வரை வரும் ஏ.சி. எக்ஸ்பிரஸ் ரயிலையும் போடி வரை நீட்டிக்கப்படும் என்று அறிவித்தும் ரயில்வே இயக்கவில்லை. சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் இதற்கிடையே மதுரை மக்களைவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ,ஒன்றிய ரயில்வே அமைச்சரை தில்லியில் நேரில் சந்தித்து போடி -சென்னை ,போடி -மதுரை ரயிலை இயக்க வேண்டும் என வலி யுறுத்தினார். இதனைத்தொடர்ந்து இந்த ரயிலை இயக்குவதற்கான நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் தற்போது மேற் கொண்டுள்ளது. இதற்கான விழா வரும் 15 ஆம் தேதி போடியில் நடைபெற உள்ளது. ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைக்க உள்ளார். இந்த புதிய அறிவிப்பின்படி தினசரி ரயில் (06701) காலை 8.20க்கு மதுரை யில் இருந்து கிளம்பி 10.30மணிக்கு போடிக்கு வந்தடைகிறது. மீண்டும் மாலை 5.50க்கு கிளம்பும் இந்த ரயில் (06702) 7.50மணிக்கு மதுரைக்கு சென்றடை கிறது. இதே போல் சென்னையில் சென்ட்ர லில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக் கிழமைகளில் போடிக்கு ரயில்(20601) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 7.15மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 9.35மணிக்கு போடியை வந்தடைகிறது. மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழ மைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 8.30மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 7.55க்கு சென்னைக்கு சென்றடை கிறது.