districts

img

மக்கள் குறை தீர்க்கும் நாளில் குவிந்த கோரிக்கை மனுக்கள்

நாகர்கோவில், செப்.12- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமை யில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  திங்களன்று (செப்.12) நடைபெற்றது.   கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உத வித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி,  சாலை வசதி உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி  234 கோரிக்கை  மனுக்கள்  பெறப்பட்டன.  பொதுமக்களிடமி ருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை  மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலு வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ. சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தே. திருப்பதி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

;