districts

பள்ளி தலைமை ஆசிரியரின் செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

திண்டுக்கல், செப்.23- திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பள்ளி மாணவர்களை கழிப்பறையை சுத்தம்  செய்ய நிர்ப்பந்திக்கும் சம்பவங்களுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வன்மையாக கண்டனத்தை தெரி வித்துள்ளது.  இது தொடர்பாக சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.முத்துச்சாமி, மாவட்டச் செயலாளர் கே.டி.கலைச்செல்வன் ஆகி யோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கணவாய் பட்டிவேலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த ஆசி ரியை அழகு கல்வித்துறையின் சார்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாண வர்களை கழிப்பறையை சுத்தம் செய்த செயலுக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாவட்டக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் பல பள்ளிகளில் பல சம்ப வங்கள் நடைபெறுவதாக பல புகார் நமக்கு வந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பாக திண்டுக்கல் சந்தைரோட்டில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்க ளை கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்லி அது வீடியோவாக படம் எடுக்கப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைர லானது. இதே போல ஆயக்குடியில் ஒரு பள்ளியில் மாணவர்களைக் கொண்டு பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்ய வைத்த சம்பவமும் நடைபெற்றது. 

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக அப்போதிருந்த முதன்மைக் கல்வி அலுவலருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக  புகார் மனுவை மாவட்டச்செயலாளர் எம்.ஆர்.முத்துச்சாமி நேரில் சென்று கொடுத்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தினார். இனி இது போன்ற சம்பவங் கள் நடைபெறாது என்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கொடுத்த வாக்குறு தியின் அடிப்படையில் அடுத்த கட்ட போராட்டத்திற்கு செல்லவில்லை.  இப்போது நத்தம் கல்வி வட்டத்திலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. எனவே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லர் உடனடியாக இது போன்ற சம்பவங்க ளை தடுத்து நிறுத்த பள்ளிகள் தோறும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். பள்ளி யில் நடைபெறும் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகளை கண்டறிய வகுப்பறை பகுதியில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும்.

தண்ணீருடன் கூடிய முறை யான கழிப்பறைகள் கட்டித்தரப்பட வேண்டும்.  பள்ளிகளில் தீண்டாமையை களைவதற்கு ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும் தீண்டாமை குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் குறித்தான கருத்த ரங்கம் நடத்த வேண்டும். இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சட்டத்தின் பார்வையில் கிடைக்கும் தண்டனைகள் குறித்தும் விளக்க வேண்டும். அதற்காக சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகமும் முன்வரவேண்டும். . வருகிற அக்டோபர 2 ஆம் தேதி மகாத்மா காந்தி  பிறந்த தினமாகும். அன்றைய தினம் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. அந்த கூட்டங்களிலும் தீண்டாமைக்கெதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தவேண்டும்.  ஆதி திராவி டர் நலத்துறையின் சார்பாக ஆண்டுதோ றும் காந்திஜி நினைவு தினத்தை தீண்டா மைக்கெதிரான நாளாக கருத்தரங்குகள் நடத்துவது வழக்கம். மாவட்ட ஆட்சியர் தலைமையில்   பள்ளி கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக பள்ளி கல்லூரிகளில் தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிகளை நடத்த முன்வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.