districts

img

அ.வல்லாளபட்டி, ஜெய்ஹிந்த்புரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. மக்கள் சந்திப்பு முகாம்

நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

மதுரை, ஜூலை 8- மதுரை மாவட்டம், மேலூர் அருகே அ.வல்லாளப்பட்டி பேரூராட்சியில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தலைமையில் மக்கள்  சந்திப்பு மற்றும் கோரிக்கை மனுக்கள்  பெறும் முகாம் ஜூலை 8 சனிக்கிழமை யன்று நடைபெற்றது. பேரூராட்சி சமுதாயக்கூட்டத்தில் நடைபெற்ற முகாமில். சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பெட்டகத்தை சு.வெங்கடேசன் எம்.பி., கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார். சாம்பிராணிபட்டிக்கு பேருந்து வசதி கேட்டு மனு அளித்தனர். போக்கு வரத்து துறை அதிகாரியிடம் பேசி யுள்ளேன். நாளை அல்லது நாளை மறு நாள் கள ஆய்வு செய்து கூறுமாறு சொல்லியுள்ளேன். பேருந்து வர ஏற்பாடு செய்து விடுவோம் என்று சு. வெங்கடேசன் எம்.பி., கூறினார்.  3 பேஷ் மின்சாரம் முறையாக வரு வதில்லை என்ற அளித்த மனுவிற்கு, மின்சார துறை அதிகாரிகளை அழைத் துப் பேசினார். 2 நாட்களுக்கு சரி செய்  வதாக கூறியுள்ளனர். மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழக்கன்று தொகுப்பு மானியத்தில் இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது. வேளாண் துறை  சார்பாக நலத்திட்டங்கள் வழங்கப் பட்டன. மின் இணைப்பு, சாக்கடை பிரச் சனை ஆகிய மனுக்கள் அதிமாக வந்  துள்ளன. அதனை பேரூராட்சி செயல்  அலுவலர் கவனத்தில் எடுத்து கொண்டு  போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய  வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அ.வல்லாள பட்டி பேரூராட்சி சேர்மன் வீ.குமரன், துணைத்தலைவர் கலைவாணன், வல்லாளபட்டி செயல் அலுவலர் சசி கலா, மேலூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ஹேமலதா, மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவநேஷ், மேலூர் குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் ரதிதேவி, மேலூர் வேளாண்மை அலுவலர் தனலட்சுமி, மேலூர் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் புவனேஸ்வரி, மண்டல துணை வட்டாட்சியர் தாமோதரன் பங்கேற்றனர். 

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை புறநகர் மாவட்ட செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு  உறுப்பினர் எஸ்.பாலா, மேலூர் தாலுகா  செயலாளர் எம்.கண்ணன், தாலுகாக்  குழு உறுப்பினர்கள் எஸ்.பி.மண வாளன், பி.எஸ்.ராஜாமணி, சி.அடைக் கன், வீ.அடக்கி வீரணன், ஆனந்த், தன சேகரன், முத்துலெட்சுமி மற்றும் கிராம  பொதுமக்கள், 14 துறை சேர்ந்த அதிகாரி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நிறைவு செய்து வைத்து பேசுகையில், 20 ஆண்டு, 30  ஆண்டு என குடியிருக்கும் வீட்டுக்கு  பட்டா கேட்டு பலர் மனு அளித்தனர். வருகிற 11 ஆம் தேதி 20 பேர் வரைக்  கும் பட்டா கொடுத்து விடுவோம் என்  றார். 

ஜெய்ஹிந்த்புரம் 

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி யில் 73, 78, 79, 80, 81, 82, 83 ஆகிய வார்டு களுக்காக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலைமை யில் மக்கள் சந்திப்பு - கோரிக்கை மனுக்  கள் பெறும் முகாம் சனிக்கிழமையன்று ஜெய்ஹிந்த்புரம் மெயின் வீதி சேது ராமன் திருமண மண்டபத்தில் நடை பெற்றது  இதில் பொதுமக்கள், பட்டா, வீட்டு வரி, சாலை வசதி, நலவாரிய பயன்கள், குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்  சனை, மாற்றுத்திறனாளிகள், பாதாள  சாக்கடை வசதி உள்ளிட்ட பொது பிரச்ச னைகள். குறித்த மனுக்களையும் முதி யோர், விதவை உள்ளிட்ட குடிசை  மாற்று வாரியம் சுகாதார நிலையம், விளையாட்டு மைதானம், அரசு கலைக்  கல்லூரி, பேருந்து வசதி உள்ளிட்டவை கள் குறித்து பொதுமக்கள் மனுக் களை வழங்கினர். இதில் மாநகராட்சி மேயர் இந்திராணிபொன் வசந்த், மாந கராட்சி ஆணையாளர் கே. ஜே. பிர வீன்குமார், துணை மேயர் தி.நாக ராஜன், மண்டலம் -5 உதவி ஆணை யாளர் எஸ். எஸ். சுரேஷ்குமார், மண்டல  தலைவர் சுவிதா விமல், மாமன்ற உறுப்  பினர்கள் உள்ளிட்டு துணை ஆட்சியர்,

வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முகாமில் 73 வது வார்டு பகுதி யைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பட்டா  கேட்டு விண்ணப்பித்தனர். அவர் களுக்கு உடனடியாக பட்டா வழங்கு வதற்கான ஆணை மற்றும் மாற்றுத்திற னாளிகள், முதியோர் உதவித் தொகை சான்று வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ஒருவர் செவித்திறன் கருவி விண்ணப்பித்த சில நிமிடங்களில் வழங்கப்பட்டது. ரேசன் கடைகளில் ரேகை பதிவு செய்யமுடியாத முதி யவர்களுக்கு ரேகை பதிவின்றி பொருட்  கள் வழங்குவதற்கான உத்தரவு  மற்றும் பட்டா கேட்டு விண்ணப்பித்த மனுக்களுக்கு உரிய தீர்வு காணும் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து 80 ஆவது வார்டு பகுதி யில் காப்பீட்டு அட்டை, நல வாரிய  அட்டைகளை நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், துணை  மேயர் டி. நாகராஜன் ஆகியோர் வழங்கினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பி னர் இரா. விஜயராஜன், பகுதிக்குழு செயலாளர் ஏ. எஸ். செந்தில்குமார் உடனிருந்தனர் .முகாமில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நர சிம்மன், அ. ரமேஷ், டி. செல்வராஜ் ஆகி யோர் கலந்துகொண்டனர்.  முகாமில் பொதுமக்கள் 700 க்கும்  மேற்பட்டவர்கள் மனுக்களை வழங்கினர்.

மாணவர்களுக்கு வாழ்த்து

 அ.வல்லாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டியார்பட்டி பள்ளி மாணவர்கள் சதுரங்கப்போட்டியில் சிறப்பாக விளையாடி தேசிய,மாநில அளவில் பரிசுகளை வென்று வருகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மாவட்ட கல்வி அதிகாரியிடம் பேசியுள்ளேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறினார்.

மனுக்களுக்கு உரிய தீர்வு

முகாமில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்திப்பது என்று முடிவு செய்து இந்த முகாமினை நடத்தி வருகின்றோம். மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் 14 மாதங்கள் இந்த முகாமினை நடத்தியுள்ளோம் .இதில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை சந்தித்துள்ளோம். இன்று நடைபெறும் முகாமிற்கு பின் வரும் - 11 ஆம் தேதி மேலூர் நகராட்சியில் மக்கள் சந்திப்பு முகாம் நிறைவு பெறுகிறது. இந்த மாபெரும் இயக்கத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அளித்த மனுக்களுக்கு உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண்பார்கள் என்று தெரிவித்தார்.

 


 

;