விருதுநகர், ஜூலை 24- விருதுநகர் அருகே கம்ப்யூட்டர் சாம்பி ராணி தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளியின் கையை தீயணைப்பு மீட்புத்துறையினர் லாவகமாக மீட்டனர். விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தர லிங்கபுரம். இங்கு அரசுத் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு ஏராளமான தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் தனசேகரன் என்பவருக்குச் சொந்தமான சூடம் மற்றும் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. 100-க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். இந்நிலையில், திங்களன்று தொழிலா ளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கும் இயந்திரத்தில் விருதுநகர், ஏடிபி காம்ப வுண்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் ரீனோ என்பவர் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாரதவிதமாக, திடீ ரென இயந்திரத்திற்குள் அவரது கை சிக்கிக் கொண்டது. அவர் வலி தாங்க முடியாமல் அலறினார். அவரது அபயக்குரல் கேட்டு, அருகில் வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளர்கள் விரைந்து ஓடி வந்து இயந்திரத்தை நிறுத்தினர். பின், அவரது கையை இயந்திரத்தில் இருந்து எடுக்க முயற்சித்தனர். ஆனால் அதற்கு போதிய பலன் கிட்டவில்லை. தொடர்ந்து விருது நகர் தீயணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி இயந்திரத்தை அறுத்து ஸ்டாலின் ரீனோவை காயங்களுடன் மீட்டனர். பின்பு, ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.