districts

img

செண்பகத்தோப்பில் பயிர்கள், வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

திருவில்லிபுத்தூர்,  மார்ச் 23- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே  மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரமான செண்பகதோப்பு  பகுதியில் விளை நிலங்களுக் குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வாழை, பப்பாளை, மா உள்ளிட்ட மரங்களை சேதப்படுத்தியது.  திருவில்லிபுத்தூர் - மேக மலை புலிகள் காப்பக வனப்  பகுதிக்கு உட்பட்ட செண்ப கத்தோப்பு வனப் பகுதியில்  மான், காட்டெருமை, காட்டு  பன்றி, யானை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மழை பெய்யாத தால் காட்டாறுகள் வறண்டு காணப்படுகிறது. கோடை காலம் தொடங்கும் முன்  னரே கடுமையான வெயில டிப்பதால் ஊற்றுகளிலும் நீர் இல்லை. இதனால் வன விலங்குகள் குடிநீர் தேடி  அடிவாரத்திற்கு வரு கின்றன. அடிவாரப்பகுதி யில் வனத்துறை சார்பில் தொட்டிகள் அமைத்து  தண்ணீர் வைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக மலை அடி வாரத்திற்கு குடிநீர் தேடி வரும் ஒற்றை காட்டு யானை தோட்டத்தில் உள்ள  வாழை, மா, பப்பாளி உள்  ளிட்ட மரங்களை சேதப் படுத்தியது. இதனால் அச்ச மடைந்துள்ள விவசாயிகள் அடிவாரத்தில் அமைக்கப் பட்டது போல் மலைப்பகு தியிலும் தண்ணீர் வைத் தால் வனவிலங்குகள் விளை  நிலங்களுக்கு வருவது தவிர்க்கப்படும் என வனத் துறைக்கு கோரிக்கை விடுத்  துள்ளனர்.