வேடசந்தூர், செப்.13- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (31) என்பவர் ஒரு டிராவல்ஸ் வாடகை வேனை புதுப்பித்து ஆண்டு வரி (எப்.சி) எடுப்பதற்காக வேடசந்தூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்திற்கு செவ்வா யன்று காலை கொண்டு வந்து காண்பித்து விட்டு மீண்டும் தனது ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். வேனை சரவணக்குமார் ஓட்டிச்சென்றார். வேடசந்தூர் - கூம்பூர் காலையில் வெரியம்பட்டி அடுத்து சாலையின் வளைவில் சென்று கொண்டி ருந்தபோது எதிரே மோட்டார் சைக்கிள் திடீரென்று வந்ததால் வேனை சாலையின் ஓரத்தில் ஒதுக்கிய போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி நடுரோட்டில் கவிழ்ந்தது. இந்த வேனில் பயணிகள் யாரும் பயணம் செய்யாத தால் பெரும் விபத்து ஏற்படவில்லை. இந்த விபத்தால் 2 மணி நேரம் அச்சாலையில் போக்குவரத்து பாதித்தது.இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.