districts

img

பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தார் சாலை

கடமலைக்குண்டு, செப்.19- தேனி மாவட்டம் மயி லாடும்பாறை அருகே முத் தலம்பாறை கிராமத்தில் வீருசின்னம்மாள் கோவி லில் இருந்து அரசு தொடக்  கப்பள்ளி வரையிலான தார்  சாலை சேதமடைந்து குண்  டும் குழியுமாக காணப்பட்  டது. இதனால் வாகன விபத்துகள் அடிக்கடி நடை பெற்று வந்தன. எனவே புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள்  கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில், வீரு சின்னம்மாள் கோவிலில் இருந்து அரசு தொடக்கப் பள்ளி வரை புதிய தார் சாலை  அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து கடந்த மாதம் புதிய தார்ச்  சாலை அமைக்கும் முதற்  கட்ட பணிகள் நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து தார் சாலையில் கற்கள் பரப்பி வைக்கப்பட்டு, பின்  னர் திடீரென பணிகள் நிறுத்தப்பட்டன. இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகி யும் பணிகள் தொடங்க வில்லை. இதனால் கற்கள் பரப்பி வைக்கப்பட்ட சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வரு கின்றனர்.  எனவே, பெரிய அளவி லான விபத்துகள் ஏற்படும் முன்பு தார் சாலை பணி களை மீண்டும் தொடங்க  சம்பந்தப்பட்ட அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.