districts

img

விருதுநகரில் ரூ,70.57 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம்

விருதுநகர், செப்.15- விருதுநகரில் ரூ.70.57 கோடியில்  மாவட்ட ஆட்சியர்  அலுவலக  புதிய கட்டி டத்திற்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்   நாட்டினார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கட்டிடம் கடந்த 1986ல் திறக்கப் பட்டது. இந்த அலுவலகத்தில் இடப் பற்றாக் குறை உள்ளதால்,  நவீன வசதிகளுடன் கூடிய மாவட்ட ஆட்சியர்  அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந் திட்ட வளாகத்தில், வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மைத்துறை மூலம் புதிய ஆட்சியர் அலுவலகம் ரூ. 70.57 கோடி மதிப்பில் ஆறு தளங்களுடன் மொத்தம் 2லட்சத்து 2 ஆயிரத்து 496 சதுரஅடி பரப்ப ளவில் கட்டப்படவுள்ளது. இந்த புதிய கட்ட டத்திற்கான கட்டிடப் பணிகளை தமிழக முதல்வர்   மு.க.ஸ்டாலின்  அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், வேளாண்மை துறை,  பள்ளிக் கல்வித்துறை,  ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத்துறை,செய்தி மக்கள் தொடர்புத் துறை,  ஊரக வாழ்வாதார இயக்கம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மாவட்டத்தின் சிறப்பு திட்டங்கள்பொதுப்பணித்துறை சார்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். பின்னர்,  சிவகாசி அருகே உள்ள ஆனை யூர் பகுதியை சேர்ந்த பாண்டி தேவி என்பவ ருக்கு அங்கன்வாடியில் பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  அமைச்சர்கள் கே.கே. எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் , தங்கம் தென்னரசு,  எ.வ.வேலு,அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாதரெட்டி, மக்களவை உறுப்பி னர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள்,  அரசு அதிகாரிகள் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். நன்றி தெரிவித்த பழங்குடியினர் முன்னதாக விருதுநகர் பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகையில் தமிழக முதல்வ ரை, காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த நரிக் குறவர் சமுதாய மக்கள் நேரில் சந்தித்த னர். அப்போது தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்காக நன்றி தெரி வித்தனர்.

;