districts

img

இந்தியாவில் ஏழை- பணக்காரர் இடையே நீண்டகால போராட்டம்: ராகுல் காந்தி பேட்டி

நாகர்கோவில், செப். 9- இந்தியாவில் இரண்டு தரப்புக்கு இடையே நீண்டகால போராட்டம் நடைபெற்று வருகிறது. ஒன்று செல்வம் படைத்தவர்கள். மற்றது ஏழை நடுத்தர மக்கள் ஆகும். இந்த போராட் டம் எளிதானது அல்ல கடினமானது என ராகுல் காந்தி தெரிவித்தார்.  இந்தியாவின் பொருளாதாரத்தை இரண்டு மூன்று தொழிலதிபர்கள் தான் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். அவர்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய செல்வந்தர்களாக மாறியுள் ளார்கள். இந்தியாவின் எதிர்காலத்தை இப்படித் தான் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்  தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி யில் துவக்கிய இந்திய ஒற்றுமை நடை பயணம் மூன்றாவது நாளாக தக்கலை  பகுதிக்கு வந்தடைந்தது. வெள்ளி யன்று (செப்.9) முற்பகல் வரையிலான நடைபயணத்தை புலியூர்குறிச்சியில் நிறைவு செய்தவர் பகல் ஒரு மணிய ளவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேலும் கூறியதா வது:  

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு குறிக் கோள் இருக்கும்.பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்சும் எங்களது பாத யாத்திரை பற்றி விமர்சித்து வருகிறார் கள். அவர்களது விமர்சனத்தை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.  சிபிஐ மற்றும் உளவுத்துறை பாரதிய ஜனதா கட்டுப்பாட்டில் உள்ளது. அதை வைத்து அவர்கள் அனைவரை யும் நசுக்கப் பார்க்கிறார்கள். காங்கிர சில் உள்ள தலைவர்கள் சிலருக்கு பாரதிய ஜனதாவிலிருந்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த ஒற்றுமை பாதையாத்திரையில் நான் ஒரு பங்கேற்பாளர்தான். நான் தலைமை ஏற்று செல்லவில்லை. அதில் பங்கு கொண்டுள்ளேன். முன்பு நடந்ததை  பற்றிய கவலைப்பட வேண்டிய தில்லை. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு செல்வதற்கு பாரம்பரிய தொடர்பு இருப்பதால்தான் கன்னியா குமரியில் இருந்து இந்த பாத யாத்திரையை தொடங்கியுள்ளோம். கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் தேர்தல் வர இருப்பதால் கூடுதல் நாட்கள் பாதயாத்திரை எதுவும் மேற் கொள்ளப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.  பேட்டியின்போது, தமிழக காங்கி ரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, நாடாளு மன்ற உறுப்பினர் விஜய்வசந்த், சட்ட மன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ரூபி மனோகரன், காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் கே. சி. வேணுகோபால், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

;