districts

img

வேலையின்றி தவிக்கும் மாற்றுத்திறனாளி வாலிபர்

தேனி , செப் 16- ஆண்டிபட்டி அருகே வேலையின்றி தவித்து வரும் மாற்றுத் திறனாளி யான பட்டதாரி வாலிபரு க்கு  அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந் துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டி பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் ஜெயராஜ்(22).  குள்ளமாகவும், சிறுவன் போல காணப்படும் மாற்றுத் திறனாளி வாலிபர் ஆவார். இவருடைய அப்பா ராமச்சந்திரன். அம்மா ஜெயலட்சுமி. இருவரும் நெசவு கூலித் தொழில் செய்து வருகின்றனர். மோ கன் ஜெயராஜ் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.காம் சிஏ படித்துள்ளார்.   கூடுத லாக தட்டச்சு பயிற்சியும் முடித்துள்ளார்.  இவரால் ஒரு குறிப்பிட்ட தூரம் நடக்கவும் முடியாது.  குள்ளமாக இருப்பதாலும், மாற்றுத் திறனாளி என்பதா லும் தனியார் நிறுவனங்க ளில் வேலையில் சேர்ப்ப தற்கு வாய்ப்புகள் மறுக்கப் படுகிறது. இதனால் பல் வேறு நேர்முகத் தேர்வுக ளில் கலந்து கொண்டு தோல்வியை கண்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் போதிய வருமானங்கள் இல்லாததால், பொருளாதா ரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். படிப் பும், திறமையும் இருந்தும், மாற்றுத் திறனாளி என்ப தால் அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு  சோகத்திற்கு தள்ளப்பட்டுள்ளர் . இதுகுறித்து மோகன் ஜெயராஜ் கூறுகையில்,  எனது அம்மா, அப்பா  இருவரும் நெசவு கூலி வேலை செய்து வருகின்ற னர். பெற்றோர் உடல்நலக் குறைவு காரணமாக வேலை க்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனால்  போதிய வருமானம் இன்றி தவித்து வருகிறோம். மேலும் நான் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தும் பல்வேறு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டேன். ஆனால் அங்கு நான் குள்ளமாக, மாற்றுத் திறனாளியாக இருப்பதாலும், குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் நடக்க முடி யாது, நீண்ட நேரம் நிற்க முடி யாது என்பதாலும் எந்த நிறுவனமும் வேலைக்கும் சேர்க்க முன்வரவில்லை.  அரசு எனக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

;