districts

img

நிலக்கோட்டை : திருடர்களின் கூடாரமான பாழடைந்த காவலர் குடியிருப்பு

சின்னாளப்பட்டி,ஜன.6- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஈபி காலனி, ஆனந்தன் நகர், புதுத்தெரு போன்ற பகுதிகளில் சைக்கிள் மற்றும் மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடர்கள் திருடிச் செல்வது தொடர்ந்து நிகழ்வதாக மக்கள் கூறுகின்றனர்.  ஆனந்தன் நகர் பகுதி யில்  அதிகாரி ஒருவர் வீட்டி லிருந்து  மோட்டாரை திரு டிச்சென்றுள்ளனர். திருடிய பொருட்களை பாழடைந்த காவலர் குடியிருப்பில் பதுக்கி வைப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.  இந்த பாழடைந்த காவ லர் குடியிருப்பில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடந்து வருவதால்  அப் பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.  இதுகுறித்து  போலீசா ருக்கு தகவல் கொடுக்கப் பட்டு, அப்போது மட்டும் பிரச்சனைகள் தீர்க்கப்படு கின்றன. ஆனால் மீண்டும் சமூக விரோதச் செயல்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது என்று கூறும் இப் பகுதி மக்கள்  தெரிவிக்கை யில்,  இப்பகுதியில் அதிகள வில் திருட்டு நடைபெறு வது சம்பந்தமாக ஏற்கனவே பல முறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள் ளது. பாழடைந்த காவலர் குடியிருப்பை இடித்து, இப் பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத் துள்ளோம். ஆனாலும் தொடர்ந்து திருட்டும்  பாழ டைந்த காவலர் குடியிருப்பு பகுதியில் சமூக விரோத செயல்களும் நடந்து வரு கின்றது. இரவு நேரங்களில் போலீசார் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி னர்.