திண்டுக்கல் மாவட்டத்தில் மழை
திண்டுக்கல், செப்.7- திண்டுக்கல் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 15 தினங்களுக்கு மேலாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 7 அன்று சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக குளிர்ந்த காற்று வீசியது .மேலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதேபோல் திண்டுக்கல்லை சுற்றியுள்ள வேட சந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், சின்னாளப்பட்டி, நத்தம், வடமதுரை, அய்யலூர், சிலப்பாடி, பால கிருஷ்ணாபுரம், நாகல்நகர், வெள்ளோடு, தாமரைப் பாடி, ராஜக்காபட்டி உட்பட பல கிராமங்களில் மழை பெய்தது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆண்டிபட்டியில் போதை மாத்திரை விற்ற 5 வாலிபர்கள் கைது
தேனி, செப்.7- தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகள், போதை மருந்து கள் விற்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னமனூரில் போதை மருந்து, ஊசி விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்க ளுக்கு போதை மருந்து சப்ளை செய்த திருச்சியை சேர்ந்த வியாபாரி மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த உதவி யாளர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து ஆண்டிபட்டி சீனிவாசா நகர் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தே கத்திற்கிடமாக ஒரு கும்பலை சுற்றித்திரிந்தனர். போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் மதுரையில் இருந்து தடைசெய்யப்பட்ட போதை மாத் திரை வாங்கி பயன்படுத்தியதும், பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இதில் சம்பந்தப் பட்ட தினேஷ்(23), சந்தானமுத்து (25), வைரம்(28), கார்த்தி கேயன்(22), நம்பிராஜ்(20) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்த முயற்சி 1100 கிலோ அரிசி -வாகனம் பறிமுதல்
தேனி, செப்.7- உத்தமபாளையம் அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் 1100 கிலோ ரேசன் அரிசி பிடிபட்டது.வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. போடி, கம்பம், உத்தமபாளையம், கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத் தப்பட்டு வருகிறது. தேனி மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவுப்படி உத்தமபாளையம் அருகே உ.அம்மாபட்டி பகுதியில் தேனி மாவட்ட பறக்கும் படை துணை வட்டாட்சி யர் முத்துக்குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் தாம ரைச்செல்வம் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1100 கிலோ ரேசன் அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரி யவந்தது. இதனை தொடர்ந்து அரிசியுடன் வாகனத்தை பறிமுதல் செய்து உத்தமபாளையம் கிட்டங்கியில் ஒப்ப டைத்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தலில் தொடர்புடை யவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தாம்பரம்- திருநெல்வேலி சிறப்பு ரயில் இயக்கம்
திண்டுக்கல், செப்.7 பண்டிகைக்கால கூட்ட நெரிசலை சமாளிப்ப தற்காக சென்னை தாம்பரத்திலிருந்து திருநெல் வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பண்டிகைக்காலத்தை முன்னிட்டு தாம்பரத்திலி ருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.20 மணிக்கு திருநெல்வேலி செல்லும் சிறப்பு ரெயில் (06051) புதனன்று புறப்பட்டது. இந்த ரயில் செங்கல் பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளுடன் கூடிய சரக்கு பெட்டி களுடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இரு சக்கர வாகனம்-பேருந்து மோதியதில் தீ விபத்து: இருவர் பலி அமைச்சர் அர.சக்கரபாணி காயமடைந்தவருக்கு ஆறுதல்
திண்டுக்கல், செப்.7- ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் ஏற்பட்ட தீயில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் உடல் கருகி இறந்தார். மற் றொருவர் சிகிச்சை பல னின்றி பலியானார். அமைச் சர்.அர.சக்கரபாணி காயம டைந்தவருக்கு நேரில் ஆறு தல் கூறினார். ஓட்டன்சத்திரம் வழி யாக 41 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு பேருந்து ஒன்று மதுரையிலிருந்து கோவைக்கு சென்றது. 3 பேர் வந்த இருசக்கர வாகனம் ஒட்டன்சத்திரம் மேம்பாலத் தில் வரும் போது இந்த விபத்து நிகழ்ந்தது. இருசக்கர வாக னத்தில் வந்தவர்களில் ஒரு வர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற பிரவீன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். இறந்த மாணவன் பழனி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஜெயபால் மகனாவார். இந்நிலையில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்ததை யடுத்து அரசு பேருந்தும் தீப் பிடிக்க ஆரம்பித்தது. இத னையடுத்து பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறி யடித்துக்கொண்டு வெளி யேறினர். பேருந்து சக்க ரத்தில் சிக்கி இறந்தவர் உடல் கருகிய நிலையில் மீட்கப் பட்டார். காயமடைந்த இரு வரை போலீசார் மீட்டு மருத் துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் இன்னொரு இளை ஞரும் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் பற்றி அறிந்த உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி சம்பவ இடத்தை பார்வை யிட்டார். சிகிச்சை பெற்ற வரை சந்தித்து அமைச்சர் அர.சக்கரபாணி ஆறுதல் கூறினார்.
மதுரை அரசு மருத்துவமனை அருகே பராமரிக்க முடியாமல் விட்டுச் செல்லப்பட்ட 9 பேர் இறப்பு
மதுரை, செப்.6- தென் மாவட்டங்களுக்கு மிக முக்கிய மான மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இந்த நிலையில் பலர் தங்களுடைய தாய், தந்தை, வீட்டில் உள்ள வயதான வர்களை சிகிச்சைக்காக அழைத்து வந்து மருத்துவமனை வாசலில் மற்றும் மருத்து வமனை அருகில் விட்டுச்செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, குறிப்பாக கடந்த 50 தினங்க ளில் மட்டுமே மருத்துவமனை அருகே கேட்பாரற்று இறந்து நிலையில் எட்டு ஆண் சடலம் மற்றும் ஒரு பெண் சடலம் என மொத்தம் ஒன்பது பேரின் சடலங்கள் இது வரை மீட்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து இறந்தது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இறந்தவர்கள் அனைவருமே முறையாக உணவு, சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தது விசாரணை யில் தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் முதியோர்களை வீட்டில் வைத்து பராமரிக்க முடியாமல் திட்டமிட்டு கொண்டு வந்து மருத்துவமனை பகுதியில் விட்டு சென்றதும் தெரிய வந் துள்ளது. சாலையோரம் ஆதரவற்ற முதியோர் களை மீட்டு அவர்களை சமூக நலத்துறை மூலம் முதியோர் முகாம்களில் பாது காக்க வேண்டும் என பொதுமக்கள் தொட ர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள், மேலும் 50 நாட்களில் ஒன்பது பேர் அரசு மருத்துவமனையை சுற்றி கேட்பாரற்று இறந்துகிடந்தது மனவேதனை ஏற்படுத் தும் சம்பவமாக உள்ளது.