காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 4 ஆண்டு சிறை
தேனி, ஜூலை 4- பெரியகுளம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் காவலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெரியகுளம் சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே ஜி.கல்லுப் பட்டி, வினோபா நகரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ரிசாத்ராஜ்(25). இவர், கடந்த 2021, ஜூலை 7ஆம் தேதி அதே ஊரில் மது போதையில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதற்கு சிகிச்சை பெறுவற்காக அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றார். சிகிச்சை பெற்ற பின்பு வலி தெரியாமல் இருக்க ஊசி போடுமாறு கூறி செவிலியர்களிடம் ரகளை செய் துள்ளார். அப்போது ஆரம்ப சுகாதார நிலைய காவலாளி கெங்கு வார்பட்டியைச் சேர்ந்த மொக்கை(64) என்பவருடன் ரிசாத்ராஜ் தகராறில் ஈடுபட்டார். அரிவாளை காட்டி அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் மொக்கை அளித்த புகாரால் ரிசாத்ராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பெரியகுளம் சார்பு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மாரி யப்பன், ரிசாத்ராஜிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி தேனியில் தொடங்கியது: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தேனி, ஜூலை 4- மக்களவை தேர்தல் பயன்பாட்டிற்காக வைக்கப் பட்டுள்ள வாக்கு பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரி பார்க்கும் பணி தொடங்கியதை தொடர்ந்து, தேனி ஆட்சி யர் ஆர்.வி.ஷஜீவனா பார்வையிட்டார். நாடாளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு தேனி நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவிற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2885, கட்டுப் பாட்டு இயந்திரங்கள் 1754, வாக்குப்பதிவை சரிபார்க்கும் இயந்திரங்கள் 1891, ஆகியவற்றை வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் இந்திய தேர்தல் ஆணைய ஆணை மற்றும் நடைமுறைகளை பின்பற்றி அங்கீகரிக்கப்பட்ட அர சியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. 10.08.2023 வரை நடைபெறும் இப்பணி களை மேற்கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணை யத்தால் நியமிக்கப்பட்ட பெங்களூரு பெல் நிறு வனத்தில் பயிற்சி பெற்ற 8 பொறியாளர்கள் மூலம் நடை பெற உள்ளது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவி யாளர் (பொது) சிந்து, உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன், தேர்தல் வட்டாட்சியர் சுகந்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குமுளி வனப்பகுதியில் கூடாரம் அமைத்து விவசாயிகள் 3 ஆவது நாளாக போராட்டம்
தேனி, ஜூலை 4- நீதிமன்ற தீர்ப்புப்படி விவசாயம் செய்ய அனுமதிக்க கோரி குமுளி வனப்பகுதி யில் 3 ஆவது நாளாக செவ்வாயன்று கொட்டும் மழையில் கூடாரம் அமைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கிறார்கள். தமிழக - கேரள எல்லை குமுளி அருகே அமராவதிபுரம், ஆசாரிபள்ளம் பகுதி களில் விவசாயம் செய்து வந்தவர்களை வனத்துறையினர் கடந்த 1994 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேற்றினர். 70 ஆண்டு காலமாக விவசாயம் செய்த தங் களை அங்கிருந்து வெளியேற்றக்கூடாது எனக் கூறி வன உரிமைக்குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்க றிஞர் சுரேந்திரன் மூலம் வழக்கு தொடுத்த னர். இந்த வழக்கில் அவர்கள் குமுளி வனப்பகுதியில் விவசாயம் செய்யலாம் என உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக் கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வனப்பகுதிக்கு சென்ற ராமர், பாண்டியன், நல்லா, சாமித்தேவன், விஜயராணி உள்பட 21 விவசாயிகள் அங்கு குடில் அமைத்து தங்கினர். அவர் கள் அங்கே தங்கக் கூடாது என கம்பம் மேற்கு வனத்துறையினர் தடுத்தனர். நீதி மன்ற உத்தரவு இருக்கிறது எனக்கூறி அங்கிருந்து வெளியேற மறுத்து இரவு முழுவதும் விவசாயிகள் அங்கு தங்கினர். அமராவதிபுரம், ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் தங்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி 25க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதுகுறித்து தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய வனப்பகுதியில் அனுமதி யின்றி தங்குபவர்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. இது பற்றி முதன்மை வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து கொட்டும் மழையில் ஜூலை 4 அன்ற மூன் றாம் நாளாக குமுளி வனப்பகுதியில் விவ சாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற னர்.
நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
சின்னாளப்பட்டி, ஜூலை 4- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பச்சமலையான்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட செம்பட்டி பேருந்து நிலையம் வழியாக மேட்டுப்பட்டிக்கு காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயின் ஏர்வால்வில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, புதிதாக போடப்பட்ட நெடுஞ் சாலையில் தார்சாலையை பெயர்த்துக் கொண்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் ஆபத்தை உணராமல் சாலையின் நடுவே வெளியேறும் தண்ணீரை பிடித்து வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் முன் மற்றும் குடிநீர் வீணாகி புதிய சாலையை சேதப்படுத்துவதை தவிர்க்கும் வகையில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.
பெண் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு
தேனி, ஜூலை 4- தேனி மாவட்டம், போடி அருகே எஸ்.தருமத்துப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (55). இவரது மனைவி சரஸ்வதி (50). தேநீர் கடை வைத்து நடத்தி வருகின்றனர். இவரது உறவினர் குமார் மகன் அர விந்தன். இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனை மன தில் வைத்து அரவிந்தன், குமார், வல்லரசு ஆகியோர் சேர்ந்து தெய்வேந்திரன், சரஸ்வதி ஆகியோரை தாக்கி காயப்படுத்தியும், கடையில் இருந்த கண்ணாடி பொருட் களை உடைத்து சேதப்படுத்தியும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து சரஸ்வதி போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரவிந்தன், குமார், வல்லரசு ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலை வாங்கித் தருவதாக மோசடி இரண்டு பெண்கள் மீது போடியில் வழக்கு
தேனி, ஜூலை 4- போடியில், வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த 2 பெண்கள் மீது போடி நகர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் முடியலூர் கிழக்கு தெரு வைச் சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் குமரவேல் (30). பொறியியல் பட்டதாரி. இவர் வேலை தேடி வந்த நிலையில், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக நாளிதழ் ஒன்றின் விளம்பரத்தை பார்த்துள்ளார். அதன்படி போடியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரமேஷ் மனைவி சுமங்கலி பிரியா என்பவரை சந்தித்துள்ளனர். சுமங்கலி பிரியாவும், போடியை சேர்ந்த தங்கராஜ் மனைவி சித்திரலேகா என்பவரும் சேர்ந்து வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வருவதாகவும் அதற்கு பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை நம்பிய குமரவேல் வங்கி கணக்கு மூலம் 3 தவணைகளில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன்பின் சுமங்கலிபிரியாவும், சித்திரலேகாவும் சொன்னபடி வெளிநாட்டில் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை யும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து குமரவேல் போடி நகர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சுமங்கலிபிரியா, சித்திரலேகா ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் சாரல் மழை
கடமலைக்குண்டு, ஜூலை 4- தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்க ளில் கடந்த சில மாதங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதன் காரணமாக மூலவகை ஆறு மற்றும் மேகமலை அருவியில் நீர் வற்றியது. அதேபோல உறை கிணறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை இல்லாமல் விவ சாயமும் பாதிப்படைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 2 நாட்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று காலை முதல் மதியம் 2 மணி வரை கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக கிராமங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சாரல் மழை தொடர்ந்து நீடித்தால் மூலவைகை ஆறு மற்றும் மேகமலை அருவியில் நீர்வரத்து ஏற்படும். கிரா மங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் நீங்கும், விவசாயமும் செழிப்படையும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.