சிவகங்கை,செப்.8- அறிவொளி இயக்கத்தின் 30ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் உலக எழுத்தறிவு தினவிழா உறுதிமொழியேற்பு கலைநிகழ்ச்சி, பேரணி மற்றும் கருத்த ரங்கம் சிவகங்கையில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள அறிவொளித் தூண் அருகே மாவட்ட வருவாய் அலுவ லர் மணிவண்ணன் தலைமையில் உலக எழுத்தறிவு தின உறுதிமொழியேற்பு நடந்தது. பின்னர் முனைவர் சே.குமரப் பன் தலைமையில் கருத்தரங்கம் நடை பெற்றது. கருத்தரங்கில் சிவகங்கை மாவட்ட முன்னாள் ஆட்சியரும், ஒய்வு பெற்ற தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளருமான கிறிஸ்துதாஸ்காந்தி காணொலி மூலமாக உரையாற்றினார்.ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமண்யன் அறிமுகவுரையாற்றினார். முருகானந்தம் வரவேற்றார். அறிவொளி மாநில ஒருங்கி ணைப்பாளர் வெங்கடேஷ் ஆத்ரேயா, முனைவர் காளீஸ்வரன், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு மேனாள் செயலாளர் பேராசிரியர் ராஜமாணிக்கம், பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் கோபிநாத், மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, ஆகியோர் பேசினர். கங்கை கருங்குயில் கலைநிகழ்ச்சி நடந் தது.தமிழ்கனல் பரிமளம்,பிரபாகரன் ஆகி யோர் பாடல் பாடினார்கள். மாலா நன்றி கூறினார்.