districts

img

சிபிஎம் புதுக்கோட்டை மாவட்ட 14வது மாநாடு கிராமியக் கலைகளுடன் துவங்கியது

புதுக்கோட்டை, டிச.21 - புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ள டக்கி காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோகட்டை மாவட்ட 14- வது மாநாடு திருமயத்தில் தோழர் கள் ப.சண்முகம், எம்.உடையப் பன், எம்.முத்துராமலிங்கம் ஆகி யோர் நினைவரங்கில் எழுச்சியு டன் தொடங்கியது. மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்  எஸ்.சங்கர், எஸ்.பொன்னுச்சாமி, மாவட்டக்குழு உறுப்பினர் பி. சுசிலா ஆகியோர் தலைமை வகித்த னர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் எம்.ஜியாவுதீன் ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரா மையன் வாசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் சி.ஜீவானந்தம் வர வேற்றார். மாநாட்டை தொடங்கி வைத்து  மாநில செயற்குழு உறுப்பினர் மதுக் கூர் ராமலிங்கம் உரையாற்றினார்.

வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் முன்வைத்தார். வரவு - செலவு அறிக்கையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.பொன்னி வாசித் தார். முன்னதாக தியாகி சண்முகம்  மற்றும் மறைந்த தலைவர்கள் ப.சண்முகம், ஆர்.கருப்பையா, எம். மாரியப்பன், எம்.முத்துராம லிங்கம், எம்.செபஸ்தியான், அ. புஷ்பம், லெனின், கே.ஆரோக்கிய சாமி, பி.வீராச்சாமி, மு.க.கமருதீன், எம்.கவிராஜன் ஆகியோரின் நினைவாக கொண்டுவரப்பட்ட நினைவு ஜோதிகளையும். தோழர் எம்.உடையப்பன் நினைவாக கறம்பக்குடியில் இருந்து கொண்டு வரப்பட்ட மாநாட்டு கொடிமரம் மற்றும் கொடியை தலைவர்கள் மதுக்கூர் ராமலிங்கம், ஐ.வி.நாக ராஜன், எஸ்.கவிவர்மன் பெற்றுக் கொண்டனர். நகரில் மாநாட்டு நினைவாக நிறுவப்பட்ட கொடி மரத்தை மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். திருமயம் பேருந்து நிலையத்தி லிருந்து தொடங்கிய பேரணியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ கொடி யசைத்து தொடங்கி வைத்தார். திருமயத்தின் முக்கிய வீதிகள் வழி யாக செந்தொண்டர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பேரணி தப்பாட்டம்,

சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலைகளுடன் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட மக்க ளின் நூற்றாண்டு கனவுத் திட்டமான காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் உள்ள டக்கி செயல்படுத்த வேண்டும்.  

மாவட்டத்தில் உள்ள இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்புகளை பெருக்கும் வகையில் அரசு தொழிற் பேட்டைகளை உருவாக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பெரும்பகு தியான ஆதிதிராவிடர் குடியிருப்பு கள் 30 முதல் 40 ஆண்டுகள் பழமை யானதாக இருக்கிறது. மேற்படி வீடுகள் சுவர்களில் விரிசல் விழுந் தும், மேற்கூரைகள் பெயர்ந்தும் மிக வும் ஆபத்தான நிலையில் உள்ளது.  சமீபத்தில் பெய்த கனமழையால் வீடுகளின் தரைத்தரளத்லிருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு குளம் போல காட்சி அளித்தது. எனவே, மனிதர்கள் வாழ முடியாத அள வில் உள்ள ஆதிதிராவிடர் குடியி ருப்புகளை இடித்துவிட்டு, அரசே  குடியிருப்புகளைக் கட்டிக் கொ டுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;