திண்டுக்கல், டிச.13- திண்டுக்கல் மாவட்டத்தில் பேரூராட்சி களில் 100 நாள் வேலை திட்டத்தை அம லாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வட மதுரை, அய்யலூர் பேரூராட்சிகள் முன்பு திங்களன்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.அருள்செல்வன், மாவட்டத் தலைவர் பி.வசந்தாமணி, பொருளாளர் கண்ணன், ஒன்றியத் தலைவர் எம்.கே.சம்சு தீன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் மலைச் சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.