districts

மதுரை முக்கிய செய்திகள்

தொடர்ச்சியாக  100 நாள் வேலை வேண்டும் வி.தொ.ச. கடையம் ஒன்றிய மாநாடு கோரிக்கை

தென்காசி, செப்.18- தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியத்தில், விவ சாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய மாநாடு, ராமலிங்க புரம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. மந்தியூர் கிளைச் செயலாளர் மணிமேகலை தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் வெங்கடேஷ் துவக்கவுரையாற்றினார். வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கார்த்திக் , மாதர்  சங்க மாவட்ட செயலாளர் மேனகா வாழ்த்துரை வழங்கி னர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளா ளர் முருகேசன் நிறைவுரையாற்றினார். ஒன்றிய தலைவராக வாசுகி , ஒன்றியச் செயலாள ராக மணிமேகலை, ஒன்றிய பொருளாளராக மாரியம்மாள்  ஆகியோர் உட்பட 14 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக 100 நாள் வேலை வேண்டும், சட்டக்  கூலி ரூ.281 கொடுக்க வேண்டும்.60 வயதை கடந்த விவ சாய தொழிலாளர்களுக்கு முதியோர் உதவித்தொகை கொடுக்க வேண்டும். 100 நாள் வேலையை பேரூ ராட்சிக்கும் விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேட்டையில் மயங்கி விழுந்து  4 வயது சிறுமி பலி

திருநெல்வேலி, செப்.18- நெல்லையை அடுத்த பேட்டை அரசரடி விநாயகர்  கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான்.  இவர்  டவுனில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை  பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியா. இவர்களது  மகள் வசந்தி (வயது 4). அந்த பகுதியில் உள்ள  அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தார். ஞாயிற்றுக் கிழமை காலை வீட்டில் இருந்த சிறுமி திடீரென தலை  சுற்றுவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் சிறுமி மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவ ரது பெற்றோர் சிறுமியை மீட்டு நெல்லை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு  பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்துள்ளனர். சிறுமியின் திடீர் மரணத்திற் கான காரணம் குறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அனுமின் நிலைய அதிகாரி வீட்டில் 50 பவுன்  நகை கொள்ளை

திருநெல்வேலி, செப்.18- நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் அறிவியல் பிரிவில் அதிகாரியாக பணியாற்றி யவர் அசோகன்(வயது 55). இவர் கூடங்குளம் அருகே  செட்டிகுளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலைய ஊழி யர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.  கடந்த 1-ந்தேதி அசோகன் கர்நாடகா மாநிலம் கைகா அணு மின் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். இதனால் அவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கர்  நாடகா மாநிலம் சென்றுவிட்டார்.  இந்தநிலையில் அதிகாரிகள் குடியிருக்கும் அந்த வளாகத்தில் உள்ள அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற  மற்ற ஊழியர்கள் பார்த்து கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் செல்போனில் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் விபரத்தை கேட்டபோது சுமார்  50 பவுன் தங்க நகைகள் வைத்திருந்ததாக அவர் தெரி வித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பீரோ உடைக்கப்பட்டு  இருந்ததால் மர்ம நபர்கள் அந்த நகை முழுவதையும் கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.  இதற்கிடையே அதே பகுதியில் உள்ள ராமன் என்ற  அணுமின் நிலைய அதிகாரியின் வீட்டிலும் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த சம்ப வங்கள் குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். வெளிநபர்கள் யாரும் அனுமதியின்றி உள்ளே வர முடி யாத அளவுக்கு அணுமின் நிலைய அதிகாரிகள் குடியி ருப்பில் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது வழக்கம். ஆனால் அந்த பாதுகாப்பையும் மீறி மர்மநபர்கள் சாதுரிய மாக வந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது எப்படி? என்பது குறித்து தீவிர விசாரணையில் போலீ சார் ஈடுபட்டு வருகின்றனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை முடிவு வருவதற்கு 2 நாட்கள்?

திருநெல்வேலி, செப்.18- நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தினமும் சிகிச்சைக்காக தூத்துக்குடி, தென்காசி போன்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான புற நோயாளிகள் தங்களது உறவினர்களுடன் வந்து செல்கின்றனர். இதில் உள் நோயாளிகளாக சேர்க்கப்படும் அனைவருக்கும் முதலில் ரத்த பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இதற்காக அரசு மருத்துவமனையின் ஒரு கட்டிடத்தில் ரத்த பரிசோதனை அறை செயல்பட்டு வருகிறது.

இங்கு பரிசோதனைக்காக நோயாளிகளின் ரத்தம் எடுக்கப்பட்டு மறுநாள் அதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும்.  இந்நிலையில், பரிசோதனைக்காக ஆய்வகத்தில் கொடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளின் முடிவை பெற ஒரு சில நேரங்களில் 2 நாட்கள் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர். சுமார் 15 முதல் 20 மணி நேரம் வரை, இரவு பகல் பாராமல் வரிசையில் காத்து கிடக்க வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் புகார் கூறி வருகின்றனர். குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு ரத்த மாதிரியின் அறிக்கை வந்த பிறகே அடுத்த கட்ட சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் ரத்த பரிசோதனை முடிவு வருவதில் சில சமயங்களில் தாமதம் ஏற்படுவதால் உரிய சிகிச்சை, உரிய நேரத்தில் அளிக்கப்படாமல் சிலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது. சில நேரங்களில் இரவு வரையிலும் நீண்ட வரிசையில் பரிசோதனை முடிவுக்காக நோயாளிகளின் உறவினர்கள் காத்து நிற்பதை பார்க்க முடிவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மிகப்பெரிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஒன்றான இந்த மருத்துவமனையில், ரத்த மாதிரியின் ஆய்வு முடிவை பெறுவதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டியிருப்பது வேதனையளிப்பதாக நோயாளிகளின் உறவினர்கள்  கூறுகின்றனர். எனவே இந்த விவகாரத்தில் மருத்துவமனை அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி, கூடுதல் ஆய்வகம் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்து, ரத்தப் பரிசோதனை முடிவுகள் தாமதம் இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் மெகா தூய்மை பணி

ஒரே நாளில் 28 டன் குப்பைகள் அகற்றம்

தூத்துக்குடி, செப்.18- தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் ஒரே நாளில் 28டன்  குப்பைகளை அகற்றி மாநகராட்சி நிர்வாகம் சாதனை படைத்துள்ளது.  உலக கடல் தூய்மை தினத்தை முன் னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை யோர கிராமங்கள், கடற்கரையோர பூங்  காக்கள் உள்ளிட்ட கடற்கரையோர பகுதி களில் செப்.17ம் தேதி முதல் அக்.2ம் தேதி   வரையிலான வார விடுமுறை நாட்களில் மெகா தூய்மை பணிகளை அந்தந்த பகுதி களிலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்  கொள்ளவேண்டும் என்று தமிழக அரசு அறி வுறுத்தியுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆலோசனையின் பேரில், மேயர் ஜெகன்பெரியசாமி தலை மையில், தூய்மை பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர் கள் அடங்கிய குழுவினர் மாநகராட்சிக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதிகளில் மெகா  தூய்மை பணிகளை அதிரடியாக மேற் கொண்டனர். மெகா தூய்மை பணியில் கடற்கரை யோர பகுதிகளில் கிடந்த பாலிதீன் பேப்பர்  கள், பிளாஸ்டிக் கழிவுகள், சேதமாகி பயன்  படுத்தப்படாத மீன்பிடி வலைகள், கயிறு கள், பேப்பர் கப்புகள் உள்ளிட்ட குப்பைகள் அனைத்தும் முற்றிலுமாக அகற்றப்பட்டது.

மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாண வியர்கள், நாட்டுநலப்பணித்திட்ட மாணவ,  மாணவியர்கள் அடங்கிய குழுவினர் மாநக ராட்சி வாகனங்கள் மூலமாக ஒரே நாளில் சுமார் 28டன் குப்பை கழிவுகளை அகற்றி பெரும் சாதனை படைத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி துப்புரவு பணி யாளர்கள், வி.கே.என்.டிரஸ்ட், தோள் கொடு தோழா நண்பர்கள் குழுவினர், நல்ல மனிதன் அஜித் நற்பணி மன்றத்தினர் ஆகிய தன்னார்வலர்கள் குழுவினர் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி அரசு இன்ஜினீயரிங் கல்லூரி, மதர்தெரசா இன்ஜினீயரிங் கல்லூரி, பிஷப்கால்டுவெல் கல்லூரி, காம ராஜ் கல்லூரி, செயின்ட்மேரீஸ் மகளிர் கல்லூரி  உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த  மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 550பேர் அடங்கிய குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் மாநகர நகர்நல அலுவ லர் அருண்குமார், உதவி ஆணையர் தன சிங், சுகாதார அலுவலர்கள் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்யநாதன், மண்டல தலைவர்  நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் ஜெயசீலி, ஜெபஸ்டின்சுதா, பவானிமார்ஷல் ஆகி யோர் கலந்து கொண்டனர். அதிரடியாக செயல்பட்டு ஒரே நாளில் 28டன் குப்பை கழிவுகளை அகற்றிய இந்த மெகா தூய்மை பணியாளர் குழுவினரை மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி பாராட்டி வாழ்த்தி னார்.

முஸ்லிம் மாணவர்களுக்கு மிரட்டல் சங் பரிவார் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாபநாசம், செப்.18- முஸ்லீம் மாணவர்களை மிரட்டிய சங் பரிவார் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நிலவிவரும் அமைதியை சீர் குலைக்கும் நோக்கோடு சில சங் பரிவார் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை சிறுபான்மை யினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதை தெளிவு படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள அரசு  மேல்நிலைப் பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவர்கள் வெள்ளிக் கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு  பள்ளிக்கு திரும்பும் வழியில், மாணவர்களை வழிமறித்து உத்தமபாளையம் இந்து முன்னணி ஒன்றியச் செயலா ளர் வேல் சிவக்குமார், இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா மற்றும் வீர சிவாஜி,  வசந்த் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்பினர் மிரட்டி யுள்ளனர். தொழுகைக்குச் சென்று வந்த முஸ்லிம் மாணவர்கள் யாரும் பள்ளிக்கூடத்திற்கு செல்லக்கூடாது என்று மிரட்டி யதோடு மட்டுமல்லாமல். அவர்களை தொழுகைக்கு அனுப்பிய பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரி வித்தும் சம்பந்தப்பட்ட நபர்கள் இதுவரை கைது  செய்யப்படாமல் உள்ளனர். சங் பரிவார் அமைப்பின ரின் இதுபோன்ற நடவடிக்கையை கண்டித்தும் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கக் கோரியும் முஸ்லிம்கள் போராடியபோது அவர்களைக் கைது செய்து பிறகு விடு வித்துள்ளது காவல்துறை. அதேபோல், சென்னை அசோக் நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட, ரங்கராஜபுரத்தில் உள்ள அரபி பாட சாலைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த 8 ஆம் வகுப்பு மாணவனை 40 வயதுள்ள மர்ம நபர் ஒருவர் தாக்கி, முஸ்லிம்கள் பயன்படுத்தும் தொப்பியை பற்றி  தரக்குறைவாகப் பேசிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த  சம்பவத்திலும் யாரும் இதுவரை கைது செய்யப்பட வில்லை. வெள்ளியன்று ஒரே நாளில் சிறுபான்மையினர் மீது  நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களை தனித்தனி சம்பவங்க ளாக அணுகாமல், தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ள  அமைதியையும், மதநல்லிணக்கத்தையும் சீர்குலைக் கும் நோக்கில் திட்டமிட்டு நடைபெறும் சம்பவங்கள் என்ற  கண்ணோட்டத்தோடு தமிழக காவல்துறை அணுக வேண்டும்.  எனவே தமிழ்நாடு முதலமைச்சர் சிறுபான்மையின முஸ்லிம்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தி யவர்களையும், இதற்கு மூளையாக செயல்படு பவர்களையும் உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக நீதி நாள் உறுதி மொழி 

தென்காசி, செப்.18- தென்காசி மாவட்ட காவல்துறையினர் சமூக நீதி நாள்  உறுதிமொழி எடுத்தனர். சமூகநீதி நாளைமுன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி எடுக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து DCRB துணை காவல் கண்காணிப்பாளர் .முத்துப்பாண்டி தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு நடை பெற்றது.

அலங்காநல்லூர் அருகே  ஒருவர் கொலை

மதுரை, செப்.18- மதுரை  அலங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிவேளி பட்டி கம்மாபட்டியைச் சேர்ந்தவர் கர்ணா. இவரது மகன் பொன்மணி (25). இவர் தனிச்சியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.  வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்ற பொன் மணி இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இத னால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் பொண்மணி பிணமாகக்  கிடந்தார். தகவலறிந்த அலங்காநல்லூர் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்  பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் வல்லுறவு: ஒருவர் கைது

விருதுநகர், செப்.18- விருதுநகர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் என்பவர் சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வல்லுறவில் ஈடு பட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை  செய்த விருதுநகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சக்திகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கட்டுமான தொழிலாளர் சங்கம் துவக்கம்

அரியலூர், செப்.18 - அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் பெரிய மறை கிராமத்தில் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்டது. சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் பி.துரைசாமி, மாவட்ட துணை செயலாளர் ஆர்.எஸ். ஆரோக்கியநாதன், ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.தர்ம ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியமறை முதல் கிளையின் தலைவராக எஸ்.அக்னீஸ்வரி, செயலா ளராக கே.கவிதா, பொருளாளராக கே.செல்லம்மாள் தேர்வு செய்யப்பட்டனர். பெரியமறை 2-வது கிளையின்  தலைவராக சீதா, செயலாளராக ஜானகி, பொருளாளராக அன்புச்செல்வி தேர்வு செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில்  இணைந்த இளைஞர்களுக்கு வரவேற்பு

திருத்துறைப்பூண்டி, செப்.18 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள விளக்குடி கிராமத்தில் 25 இளைஞர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு சிபிஎம் விளக்குடி கிளைச் செயலாளர் நாக.அறிவழகன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். விளக்குடி கிராமத்தில் பல்வேறு கட்சி இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இளைஞர்களுக்கு,  மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ‘காவிரி டெல்டா- உள்ளும் புறமும்’ என்ற புதினத்தை வழங்கினார். பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினர். தொடர்ந்து விளக்குடி கடைவீதி, வெள்ளாளர் தெரு, அரசமரத்தடி தெரு உள்ளிட்ட 10 இடங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ஆறு.பிரகாஷ், ஒன்றியக் குழு உறுப்பினர் மாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

;