districts

திருச்சி முக்கிய செய்திகள்

மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சென்னை போராட்டத்தில் பங்கேற்க முடிவு

பெரம்பலூர், மார்ச் 13 - சிஐடியு பெரம்பலூர் மாவட்ட சிறப்பு பேரவை சனிக்கிழமை துறைமங்கலத்திலுள்ள சங்க அலுவலகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு வட்ட தலைவர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் விளக்க உரையாற்றினார்.  தமிழக அரசும் மின்வாரியமும் அறிவித்தபடி தினக்கூலி ரூ.380-ஐ அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கி ப டிப்படியாக பணி நியமனம் செய்திட வேண்டும். தானே, வார்தா, கஜா, ஒக்கி புயல் பாதிப்புகளின் போது மிக  துரிதமாக செயல்பட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு மார்ச் 16 அன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பாக நடைபெறக் கூடிய மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு இரண்டு பேருந்து மூலம் சென்னை செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது.


பேராவூரணி  தீயணைப்பு நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா...?

 தஞ்சாவூர், மார்ச் 13 - வாடகைக் கட்டிடத்தில் 36 ஆண்டுகளாக இயங்கி வரும்  பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத் திற்கு சொந்தக் கட்டிடம் கட்டப்படுமா என கேள்வி எழுந்துள் ளது.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் கடந்த 1986 ஆம்  ஆண்டு, முதன்முதலாக தீயணைப்பு நிலையம் தொடங்கப்பட் டது. அந்நிலையம், சேதுசாலையில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே, ஆத்தாளூர் வீரமாகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 2008 ஆம் ஆண்டு வரை  இயங்கி வந்தது. பின்னர் 2008 முதல் தற்போது வரை, ஆவணம்  சாலையில் தனியாருக்கு சொந்தமான வாடகைக் கட்டிடத் தில் இயங்கி வருகிறது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுக் கோட்டை சாலையில், அரசு கால்நடை மருத்துவமனை அருகே  அரசுக்கு சொந்தமான இடத்தில், தீயணைப்பு நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், என்ன  காரணத்தினாலோ இதுவரை பணிகள் தொடங்கப்படா மலேயே உள்ளது.  விரைவில் அந்த இடத்திலோ அல்லது அரசுக்கு சொந்த மான இடத்திலோ, சொந்தக் கட்டிடத்தில் தீயணைப்பு நிலை யம் தொடங்கப்பட வேண்டும். அதேபோல் தீயணைப்பு நிலைய பணியாளர்கள் பலரும் வாடகைக்கு குடியிருந்து வரும் நிலையில், அவர்களுக்கு பணியாளர் குடியிருப்பு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில், வரவுள்ள தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை யில், இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.