districts

img

வண்டிப்பேட்டை வசூலை முறைப்படுத்துக: பெரம்பலூரில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர். ஜூன் 6-பெரம்பலூர் நக ராட்சி சாலையோர வியாபா ரிகளிடம் அடாவடியாக வண்டிப்பேட்டை வசூலை கைவிட வேண்டும். வெண்டர் கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட சாலையோர வியா பாரிகள் மற்றும் விற்பனை யாளர்கள், தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஜூன் 6 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் வி.வரத ராஜ் தலைமை வகித்தார்.  

மாவட்ட நிர்வாகிகள் பி. ெங்கராஜ், அ.ரெங்கநாதன், ஆர்.யுவராஜ், ஏ.கே.ராஜேந் திரன், எம்.கருணாநிதி, எம்.செல்லத்துரை, ஜி. செல்வி ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப்பேசி னர். சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.அகஸ்டின் நிறை வுரையாற்றினார்.   வெண்டர் கமிட்டியில் பேச்சுவார்த்தை நடத்தி வண்டிப்பேட்டை வசூலை முறைப்படுத்த வேண்டும். வசூல் செய்யும் போது அடா வடித்தனமாக மிரட்டு வதை நிறுத்த வேண்டும்.  சாலையோர வியாபாரி களுக்கு  கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும்,

சாலையோர வியாபாரிகளை விடுபடா மல் கணக்கெடுத்து புகைப் படத்துடன் கூடிய அடை யாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக  அப்புறப்படுத்தும் போக்கி னை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப் பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.இதில் கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;