districts

img

பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேரு 3.89 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பெரம்பலூர். ஜூன் 5 - பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என். அருண்நேரு, 3,89,107 வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றார். 

பெரம்பலூர் தொகுதிக்கான வாக்கு  எண்ணிக்கை செவ்வாயன்று, பெரம்ப லூர் ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடை பெற்றது. மொத்த தபால் ஓட்டு -10, 517. அதில் 1,150 வாக்குகள்  செல்லாத வையாக அறிவிக்கப்பட்டன. 247 நோட்டா  வாக்குகள் பதிவாகின.

பின்பு வாக்கு இயந்திரங்களில் மொத்தம் 24 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆரம்ப முதலே  திமுக வேட்பாளர் அருண்நேரு முன்னிலை வகித்தார். இறுதியாக, திமுக வேட்பாளர் அருண்நேரு 6,03, 209 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 2,14,102 வாக்குகளும், பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் 1,61, 866 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தேன்மொழி 1,13,092 வாக்கு களும் பெற்றனர். பாஜக வேட்பாளர்  பாரிவேந்தர் உட்பட 21 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இதில் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,89,107 வாக்குகள் வித்தியா சத்தில் வெற்றி பெற்றார்.  பின்னர் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கற்பகம் வெற்றி பெற்ற திமுக வேட்பா ளர் அருண்நேருவிடம் வெற்றிச் சான்றி தழை வழங்கினார். தேர்தல் பொது பார்வையாளர் ராஜேந்திர குமார் வர்மா, அமைச்சர் நேரு, எஸ்.பி.ஷியா மளா தேவி, உதவி ஆட்சியர் கோகுல்,  ஆர்டிஓ வடிவேல்பிரபு ஆகியோர் உட னிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அருண்நேரு, “பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த அனைத்து மக்களுக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  பெரம்பலூர்  நாடாளுமன்றத் தொகு திக்கு நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றார்.

;