districts

புதுவையில் அதிகரிக்கும் கொரோனா

புதுச்சேரி, ஏப். 4- நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. புதுவையிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மெதுவாக அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. புதுவையில் 201 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக புதுவையில் 16, காரைக்காலில் 13, ஏனாமில் 2 பேர் என மொத்தம் 31 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள் ளனர். காரைக்கால் சுனாமி குடி யிருப்பை சேர்ந்த 35 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பல னின்றி அவர் இறந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.குலோத்துங்கன் திங்களன்று (ஏப். 4) செய்தியாளர்களிடம் கூறு கையில், “நரம்பியல் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்ட காரைக் காலைச் சேர்ந்த பெண் ஒரு வர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இல்லை. ஏப்ரல் 1ஆம் தேதி தொற்று கண்டறியப்பட்டது. 2ஆம் தேதி அவர் உயிரிழந்தார். இணை நோய் பாதிப்புகளால் அவர் உயிரிழந்துள்ளார். இவர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எதுவும் பெறவில்லை. மாவட்டத்தில் இதுவரை 33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்க ளுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. வீட்டுத் தனிமையில், நல்ல நிலையில் உள்ளனர். மருத்துவக் குழு வினர் அவர்களுடன் தொடர்பில் உள்ளனர். முதியோர், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோர் பாது காப்பாக இருக்கும் வகை யில் முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக பொது இடங்க ளில் மக்கள் முகக்கவ சம் அணி யவும், சமூகஇடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த நடைமுறையை கட்டாயப்படுத்தும் அளவுக்கான சூழல் நிலவவில்லை. மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்று தொடர்பான பதட்டமான சூழலோ, சமூகப் பரவலோ இல்லை. அரசு மருத்துவமனையில் தற்போதைக்கு கொரோனா வார்டு அமைக்க வேண்டிய அவ சியம் எழவில்லை. எனினும் எந்தவிதமான சூழலையும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றார்.