புதுக்கோட்டை, அக்.1 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தானக் கழகத்திற்கு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் சனிக்கிழமை ரத்தக் கொடையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்து வமனையின் சார்பில் ரத்தக் கொடையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021-22 ஆம் ஆண்டுக்கான விருது ரத்த தானத்தில் சிறப்பாக ஈடுபட்டு வரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தானக் கழகத்திற்கு வழங்கப்பட்டது. விருதினை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதியிடமிருந்து வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், முன்னாள் மாவட்டச் செயலாளர் துரை.நாரா யணன், நகரக்குழு உறுப்பினர்கள் ஜீவா, தீபக் பெற்றுக் கொண்டனர்.