புதுக்கோட்டை, மார்ச் 11- புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி சனிக்கிழமை வழங்கினார். நிகழ்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) இர.தேவேந்திரன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மோ.மணிகண்டன் (தொ.வ.), பெ. வேல்முருகன், கல்லூரி முதல்வர் பா.புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.