அறந்தாங்கி, டிச.24- புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி தாலுகாவிற்குட்பட்ட செய்யா னம், மஞ்சக்குடி, பாலையூர், குமரப்பன் வயல், கொடிக்குளம் உள்ளிட்ட பகுதி களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் விவசாயி கள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்த னர். ஆனால், விவசாயம் செய்து 100 நாட் களை கடந்த நிலையில் போதிய மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகி போ யின. இதனால், வேதனை அடைந்த விவ சாயிகள் நெற்பயிர்களை மாடுகளுக்கு இரையாக்கினர். இந்நிலையில், விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னத்துரை பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு விவ சாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘மண மேல்குடி செய்யானம், மஞ்சக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதிய மழை இல்லாமல் விவசா யம் முற்றிலும் பொய்த்து விட்டது. மணமேல்குடி பகுதிக்கு ஆற்று படுகையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்வதற்கு வாய்க்கால் வசதிகள் உள்ளன. இந்த வாய்க்கால் வசதியை முறையாக பயன்படுத்தி, தண்ணீர் விற் பனை செய்வதை தடுத்து இப்பகு திக்கு தண்ணீர் கொடுத்தால் நிச்சய மாக மணமேல்குடி பகுதி முழுவதும் விவசாயம் சிறப்பாக நடைபெறும். செய்யானம் ஏரியை தூர்வாரி தண்ணீர் கொடுத்தால் பல ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய முடியும். இப்பொ ழுது 10 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்து இருக்கக்கூடிய வயல்கள் முழுவதும் அழிந்து கொண்டிருக்கிறது. எனவே, மணமேல்குடி பகுதியை வறட்சி பகுதியாக அறிவித்து, வறட்சி நிவா ரணம் வழங்க தமிழக அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும் போர்க்கால அடிப்படையில் விவசாயி களுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிர மணியன், மணமேல்குடி ஒன்றியச் செய லாளர் கரு.இராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
மணமேல்குடி ஒன்றியத்துக்குட் பட்ட செய்யானம், மஞ்சக்குடி, கொடி குளம், உள்ளிட்ட பகுதிகளில் பயிர் செய்யபட்ட ஆயிரம் ஏக்கர் பயிர்கள் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகி உள்ள நிலையில் உரிய நிவா ரணம் கேட்டு கோட்டைப்பட்டினம் கடை வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கரு.இராம நாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன், விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியன் ஆகியோர் விளக்கிப் பேசினர்.