புதுக்கோட்டை, செப்.21 - அடிப்படை வசதிகள் கேட்டு மனுக் கொடுக்க சென்ற மாணவர்களைத் தாக்கிய புதுக்கோட்டை மன்னர் கல்லூரி முதல்வரைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் புதன்கிழமை மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். அரசு தன்னாட்சி பெற்ற கல்லூரி யான புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் சுமார் 4600 மாண வர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி யில் படிக்கும் மாணவர்களுக்கு போது மான அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொ டர்ச்சியாக கோரிக்கை வைத்து போராட் டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உடனடியாக குடி நீர், கழிப்பிட வசதியையாவது செய்து தர வலியுறுத்தி கல்லூரி முதல்வர் திருச் செல்வத்தை சந்தித்து மாணவர்கள் மனுக் கொடுத்துள்ளனர். அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் “நீயெல்லாம் மனுக் கொடுக்க வந்துட் டியா? நீ என்ன மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவனா? உனது பெற்றோரை அழைத்து டி.சி கொடுக்கிறேன் பார்” என்று மிரட்டும் தொனியில் பேசிய தோடுமட்டுமின்றி, நான்கு மாண வர்களை சரமாரியாக கன்னத்தில் அறைந்து ஒரு ரவுடியைப் போல நடந்து கொண்டதாக மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர்கள் போராட்டம்
இதனால் மாணவர்கள் வகுப்பு களைப் புறக்கணித்து முதல்வரைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் ஜனார்த் தனன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் ஆவேசத் தைக் கண்ட புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் குருநாதன், மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன் மற்றும் சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து கல்லூரி முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து தெரிவித்த மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன், “கல்லூரி முதல்வர் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்ததாகவும், இது போன்ற தவறு இனிமேல் நடைபெறாது எனவும், அடுத்த 10 தினங்களுக்குள் மாணவர்களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும்” எனவும் தெரிவித்துள்ள தாக கூறினார். இதனைத் தொடார்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டதாக தெரிவித்தார்.