உதகை , நவ. 27 - உதகை அருகேயுள்ள கோடப்பமந்து கால்வாயை தூர்வார மாவட்ட நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால் அப்பகுதியி னர் கடும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். உதகையில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த கனமழையின் போது கிரீன்பீல்ட், கூட்செட், காந்தள் போகி தெரு உள்ளிட்ட பகு திகளில் குடியிருப்புகளுக்குள் மழை வெள் ளம் புகுந்தது. இதனால் அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், நக ராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் கிரீன் பீல்ட் பகுதியில் மட்டும் உடனடியாக வீடுக ளுக்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் அருகி லுள்ள கோடப்பமந்து கால்வாயை தூர்வார ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடை பெற்றது. ஆனால், கூட்செட் மற்றும் காந்தள் போகி தெரு உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக, கூட்செட் சாலையில் ஆசிரியர் இல்லம் அருகில் ரயில்வே ஊழியர் குடியிருப் பிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கிறது. இதையொட்டி அருகில் ஓடும் கால் வாயை மண்ணை நிரப்பி அடைத்து உள்ள னர்.
இதன் காரணமாக மழைநீர் வெளியேற போதிய வசதி இல்லாமல் குடியிருப்புகளுக் குள் புகுந்து விடுகிறது. அதுவும், புயல், மழை என்று வானிலை மையம் அறிவிக்கும் போதெல்லாம் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்ற னர். எனவே மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் உடனடியாக கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.