districts

img

ஸ்டெர்லிங் பயோடெக் ஆலையை திறந்திடுக சிஐடியு முற்றுகைப் போராட்டம்

உதகை, டிச.7 - உதகை அருகே  மூடிய ஸ்டெர் லிங் பயோடெக் தொழிற்சாலையை  மீண்டும் திறக்கக்கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே எலும்புகளில் இருந்து கால் சியம் பிரித்தெடுக்கும் ஸ்டெர்லிங் பயோடெக் என்னும் தனியார் தொழிற்சாலை நிறுவனம் செயல் பட்டு வந்தது. இத்தொழிற்சாலை யானது  கடந்த இரண்டு ஆண்டுக ளுக்கு முன்பு திடீரென மூடப்பட்டு 400க்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் கட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். இதனால் தொழிலாளர் கள் வேலையிழந்து, அவர்களது குடும்பத்தார் வறுமையின் கொடு மைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆகவே, இந்த தொழிற்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தொழிலாளர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகம் உள் ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினரி டம்  முறையிட்டும் இதுவரையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படவில்லை.   இந்நிலையில், திங்களன்று இந்த தொழிற்சாலையை சிஐடியு ஸ்டெர்லிங் பயோடெக் ஊழியர் சங்கத்தின் தலைவர் ராஜரத்தி னம், ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி, முன்னாள் பொதுச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் தலைமை யில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். மேலும், உத கையில் தற்போது நிலவிவரும் கடும் குளிரையும் பொருட்படுத் தாமல் தொழிற்சாலையின் முன்பு  தொழிலாளர்கள் கூடாரம் அமைத் துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து காவல் துறையி னர், உதவி ஆட்சியர் முன்னிலை யில் தொழிற்சாலையின் உயர் மட்டக் குழுவினருடன்  டிச.9ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை நடத் திட  ஏற்பாடு செய்தனர். இதைய டுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.