நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று சிறப்பாக பணிபுரிந்த பந்தலூர் கிளை நூலகத்தின் மூன்றாம் நிலை நூலகர் வே.அறிவழகனுக்கு, டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது, வெள்ளிப் பதக்கம் மற்றும் ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையும், மேலூர் கிளை நூலக வாச கர் வட்டத்திற்கு நூலக ஆர்வலர் விருதையும் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட நூலக அலுவலர் ஜோதிமணி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.