districts

img

சாதிய ரீதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றிடுக மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், டிச. 31-  சாதிய ரீதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டை அகற்றக்கோரி எலச்சி பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத் தில் ஒன்றியத் தலைவருக்கான அறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு  திறக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழாவில் அமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் கல்வெட்டில் ஊராட்சி மன்ற தலைவர் எல்.லதா பெயரும், கவுன்சி லர் சு.சுரேஷ் பெயரும் இடம்பெ றவில்லை. தலித் சமூகத்தை சேர்ந்த வர்கள் என்ற காரணத்தாலே கல் வெட்டில் இவர்கள் இருவரின் பெயர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இத்தகைய இழிவான செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த மார்க்சிஸ்ட் கட்சி, இதை உடனடி யாக மாற்றக்கோரி மாவட்ட ஆட்சிய ருக்கும், உள்ளாட்சித் துறைக்கும் கோரிக்கை மனு அனுப்பியது. ஆனால், அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து  வருகின்றனர். இந்நிலையில், சாதிய ரீதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு தலித் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பெயர் களை கல்வெட்டில் இடம் பெயர  செய்ய வேண்டும் என வலியுறுத்தி  வியாழனன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  

எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கட்சியின்  ஒன்றிய குழு உறுப்பினர் பி.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ந.வேலுசாமி, ஒன்றிய கவுன்சிலர் சு.சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;