நாமக்கல், டிச.15- எலச்சிபாளையம் அருகே மர்ம நோயால் அடுத்தடுத்து ஆடுகள் பலியாகி வருவதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சி பாளையம் அருகே கொத்தமபாளையத்தில் திருமணி முத்தாறு வாய்க்கால் உள்ளது. அதனையொட்டி உள்ள விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஆடு, மாடு களை கரையோரமாக மேய்ச்சல் செய்து வருகின்றனர். இந் நிலையில், கடந்த நான்கு தினங்களாக 5க்கும் மேற்பட்ட ஆடுகள் மர்ம நோய் காரணமாக அடுத்தடுத்து இறந்து விட்டன. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். ஆடு, மாடுகளே தங்களது வாழ்வாதாரமாக இருந்து வரும் நிலையில், தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதி விவசா யிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.