districts

img

போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் தவிப்பு

நாமக்கல், ஜூன் 6- பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத் திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து  பாதிப்பால், அவசர தேவை ஆம்பு லன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளை யத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடை பெற்று வருகிறது. இதற்காக பல்வேறு  பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிபாளையம் பழைய பாலம் சாலை அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக பள் ளம் தோண்டப்பட்டு, சரிவர மூடப்பட வில்லை என தெரிகிறது.

இதன் காரண மாக கனரக வாகனங்கள், பேருந்துகள் உள்ளிட்டவை அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பள் ளிபாளையம் புதுப்பாலத்தின் வழியாக  அனைத்து வாகனங்களும் ஈரோட்டில் இருந்து வந்ததால், எதிரெதிர் திசையில்  அதிகளவு வாகனங்கள் நின்று, செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிப்பு மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் அவசர  தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடி யாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து  உள்ளூரில் இருந்த சமூக ஆர்வலர்கள்  மற்றும் போலீசார் உதவியுடன் போக்கு வரத்து சரி செய்யப்பட்டது. அவ்வப் போது இதுபோல போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருவதால், பாலம் கட் டும் பணிகளை விரைந்து முடிக்க வேண் டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்ப குதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர்.

;