நாமக்கல், நவ.27- நாமக்கல் மங்களபுரம் பகுதியில் 108 ஆம்பு லன்ஸ் சேவையை மீண்டும் செயல்படுத்தக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் மனு அளித்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாம கிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்கள புரம் கிராம பஞ்சாயத்தை சுற்றியும் சுமார் 20க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின் றனர். இங்குள்ள மங்களபுரம் கிராம ஆரம்ப சுகா தார நிலையத்தில் சுமார் பத்து வருடங்களாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டு வந்தது. இந் நிலையில் கடந்த ஓராண்டு காலமாக 108 ஆம்பு லன்ஸ் வாகனம் செயல்படாமல் இருந்து வரு கிறது.
இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலனோர் விவசாயத்தை சார்ந்தவர்கள் என்பதால், அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் கடித்து பாதிப் பிற்குள்ளாகி வருகின்றனர். இவர்கள் மருத்துவம னைக்குச் செல்ல வேண்டுமெனில் 30 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராசிபுரம் மருத்துவமனைக்கோ அல்லது 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆத்தூர் மருத்துவமனைக்கோ தான் செல்ல வே ண்டும்.
இத்தகைய சூழலில் ஏற்கனவே இயக்கப் பட்டு வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப் பட்டுள்ளதால் அப்பகுதியினர் பெரும் சிரமத்திற் குள்ளாகி வருகின்றனர். எனவே, ஏழைகளின் உயிர்காக்கும் அவசர ஊர்த்தியான 108 அம்பு லன்சை மீண்டும் மங்களபுரம் பகுதியில் இயக்கிட ஆவணம் செய்ய வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செய லாளர் தே. சரவணன் தலைமையில், நாமக்கல் மாவட்ட இணை இயக்குநர், சுகாதார பணிகள் அலு வலரை சந்தித்து மனு அளித்தனர்.