districts

img

4 ஆயிரம் போலீஸ் பாதுகாப்புடன் மோடி ‘தியானம்’

நாகர்கோவில், மே 29- பிரதமர் நரேந்திர மோடி வியா ழக்கிழமை முதல் கன்னியாகுமரி விவே கானந்தர் பாறையில் தொடர்ந்து 45 மணி நேரம் தவமிருக்கப் போவதாக அறி விக்கப்பட்டுள்ளது.

‘தான் மனிதப் பிறவி அல்ல!’ என்  றும், கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட அவதாரம் என்றும் பிரதமர் மோடி கூறி  வருகிறார். இந்நிலையில்தான் அவர் 45 மணிநேரம் தொடர் தியானம் இருக்கப்  போவதாக கூறியுள்ளார்.

1882-இல் சுவாமி விவேகானந்தர், கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். அப்போது ஸ்ரீபாதம் எனப்படும் பாறை யில் தவம் செய்ய விரும்பினார்; ஆனால்  விவேகானந்தரை அழைத்துச் செல்ல மீனவர்கள் மறுத்துவிட்ட நிலையில், கடலில் நீந்தியே சென்று ஸ்ரீபாதம் பாறையில் 3 நாட்கள் தவமிருந்தார் என்றும் கூறப்படுவது உண்டு. இதனா லேயே ஸ்ரீபாதம் பாறைக்கு விவேகா னந்தர் பாறை என பெயர் வந்ததாக வும் கூறப்படுகிறது. பின்னாளில் இந்த  பாறையில் தியான மண்டபம் அமைக்  கப்பட்டு சுற்றுலா தலமாக மாற்றப் பட்டது. 

இந்நிலையில், விவேகானந்தரைப் போலவே 3 நாள் தவமிருக்க திட்ட மிட்டு, வியாழனன்று மோடி கன்னியா குமரி வருகிறார். அவருக்காக, தியான மண்டபத்தில் ஏசி பொருத்தப்பட்டு அனைத்து வசதிகளையும் கொண்ட அறையாக மாற்றப்பட்டு உள்ளது.

விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திர நாத் தத்தா. மோடியின் இயற் பெயர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி. 142 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு தவமிருக்கும் மோடியின் பெயரிலும் ‘நரேந்திரா’ என்று வருவது தற்செயலானது அல்ல என பாஜக-வினரும், மோடியின் பக்தர்களும் வழக்கம்போல கன்னங்களில் போட்டு பக்தி பரவசத்தை வெளியிட்டு வரு கின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர் தல் இறுதிக் கட்ட பிரச்சாரம் முடிந்த பின்பு பிரதமர் மோடி உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள குகை யில் 17 மணி நேரம் தியானம் செய்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் பயணத் திட்ட விவரம் 

தில்லியில் இருந்து விமானம் மூலம்  கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும்  பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் வியாழக்கிழமை (மே 30)  மாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வளா கத்தில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு வருகிறார்.

பின்னர், கார் மூலம் அருகில் உள்ள  பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக  வளாகத்திற்கு செல்லும் பிரதமர் மோடி,  அங்கிருந்து கடல் நடுவே உள்ள விவே கானந்தர் நினைவு மண்டபத்திற்கு தனி  படகு மூலம் செல்கிறார். அன்று மாலை  முதல் ஜூன் 1 வரை தொடர்ந்து 3 நாட்க ளுக்கு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார்.

3 நாட்கள் தியானத்திற்கு பின்னர்  ஜூன் 1 (சனிக்கிழமை) அன்று மாலை  கரை திரும்பும் பிரதமர் நரேந்திர  மோடி, 3.25 மணிக்கு கன்னியாகுமரி யில் இருந்து ஹெலிகாப்டரில் புறப் பட்டு, 4.05 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையம் செல்ல உள்ளார்.

;