நாகர்கோவில், செப்.25- கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்தார். இவர் சனிக்கிழமையன்று மாலை இரு சக்கர வாகனத்தில் குலசேகரத்தில் இருந்து பேச்சிப்பாறை நோக்கி சென்று கொண்டி ருந்தார். திருநந்திக்கரை சேனங்கோடு பகு தியில் சென்ற போது, எதிரில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜேஷ் தூக்கி வீசப் பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குலசேகரம் தனி யார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது ராஜேஷ் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சிவப்பிரியா கொடுத்த புகாரின்பேரில் குலசேகரம் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.