districts

img

திருவாரூர் மத்திய பல்கலை.யில் 8 ஆவது பட்டமளிப்பு விழா

திருவாரூர், மே 29 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 8ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 467  பெண்கள், 387 ஆண்கள் என 854 பட்ட தாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பத்மபூஷன் விருது பெற்றவரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பேராசிரியர் ஜி.பத்ம நாபன் தலைமையேற்று உரையாற்றி னார்.

துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பதிவாளர் பேராசிரியர் ஆர்.திருமுரு கன், நிதி அலுவலர் கிரிதரன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் சுலோசனா சேகர், நூலகர் முனைவர் ஆர்.பரமேஸ்வரன் மற்றும் புல  முதன்மையர்கள், துறைத் தலை வர்கள், பேராசிரியர்கள், அலுவலர் கள், பணியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ண யக் குழுவின் (NAAC) அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டின் இரண்டாவது சுழற்சியில் 3.44 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அண்மையில் A+ (A Plus) தர வரிசையைப் பெற்றுள்ளது.

இந்த வளர்ச்சி பல்கலைக்கழகத்தின் சிறப் பான மற்றும் தொடர்ச்சியான கல்விசார் முன்னெடுப்புக்கு தக்க சான்றாக அமைந்துள்ளது.  பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.பத்மநாபன் தனது தலைமையுரையில், “மாணவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்று வது மட்டுமல்லாமல், சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை  அளிக்கும்  வகையில், தொழில்சார் பணி வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அறிவுசார் தேடலும், புது மைகளை நோக்கிய உங்களின் பயண மும் சமூகம் மற்றும் தேசத்தின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்குப் பங்களிப்பதாக அமைய வேண்டும்” என தெரிவித்தார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழ கத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் பேசுகையில், “பல் கலைக்கழகம் நாக் தரவரிசையில் இரண்டாவது சுழற்சியில் B++ இருந்து A+ பெற்றதற்காகத் தனது உளம் நிறைந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி னார்.

பல்கலைக்கழகம் கல்வித் தரத்தை உயர்த்துவதில் மிகுந்த முனைப்புடன் உள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை உலகப் புகழ்பெற்ற இதழான Nature Index இன் கருத்துக் கணிப்பில் 55 ஆவது இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது” என்றார்.