districts

img

திருவண்ணாமலையில் 2.33 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சி.என்.அண்ணாதுரை மீண்டும் வெற்றி

திருவண்ணாமலை,ஜுன்5- திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் 5,47,379 வாக்குகள் பெற்று, 2,33,931 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.  திருவண்ணாமலை தொகுதியில்  திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன், அதிமுக வேட்பாளர் கலியபெருமாள், பிஎஸ்பி வேட்பாளர் மோகன்ராஜா உள்ளிட்ட 20 சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய் அன்று (ஜூன்4) நடைபெற்றது. முதல் சுற்றில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை 27,414 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கலிய பெருமாள் 15,781 வாக்கு களும்,பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 7194 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு 4397 வாக்கு களும் பெற்றனர்.

11 ஆயிரத்து 633 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அண்ணாதுரை முதலிடத்தில் இருந்தார்.   தொடர்ந்து 10 ஆவது சுற்று முடிவில் 1,29,061 வாக்குகள் வித்தியாசத்திலும், 15 ஆவது சுற்று முடிவில் 1,75,899 வாக்கு வித்தி யாசத்திலும்,  20 ஆவது சுற்றில் 1,94,378 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னி லையில் இருந்த அவர் இறுதிச்சுற்றின்  முடிவில், 5,47,379 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வாக்கு எண்ணிக்கை முடி வில் அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 3,13,448 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 1,56,650 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்திலும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரமேஷ்பாபு 83,869 வாக்கு கள் பெற்று 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ள னர்.

இதையடுத்து. அமைச்சர் எ.வ. வேலு, அமைச்சர் செஞ்சி  கே.எஸ். மஸ்தான், சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, திமுக மாநில மருத்து வர் அணி துணை தலை வர் எ.வ.வே. கம்பன் உள்ளிட்டோர் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர்.  இவர்கள் முன்னி லையில் திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரையிடம் வெற்றிச் சான்றிதழை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.