திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் அத்திமூர் வடகாடு பகுதியில் வசிக்கும் இருளர் காலனி மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் மு.அஞ்சலி தலைமையில் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மு.வீரபத்திரன், ப.செல்வன், தரணி சர்க்கரை ஆலை சங்க நிர்வாகி க.பாலமுருகன், விவசாய சங்க நிர்வாகி அ.உதயகுமார் பேசினர்.