districts

img

உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்வு

உடுமலை, டிச.7- உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந் துள்ளதால், அணையிலி ருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிக ரித்துள்ளது. இதனால் கரையோர மக்கள் பாது காப்பாக இருக்க பொதுப் பணித்துறையினர் எச்சரித் துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அமரா வதி அணையின் அதிகபட்ச உயரம் 90 அடி  ஆகும். இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட் டங்களை சுற்றியுள்ள பல கிராமங்களில் 55  ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி  பெறுவதுடன், 100க்கும் மேற்பட்ட கிராமங்க ளின் குடிநீர் வசதி பெறுகின்றன. அணையிலி ருந்து பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிக ளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு  பாசனப் பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதவிர கல்லாபுரம், ராமகுளம் நேரடி  பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கப்படுகிறது.  இந்நிலையில், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான பாம்பாறு சின்னாற்றிலும், கொடைக்கானல் தேனாற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், திங்கட் கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள 90 அடியில்  89.51  அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரண மாக அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து  வருவதால், கரையோர கிராம மக்கள் பாது காப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறை யினர் எச்சரித்துள்ளனர். மேலும், அணை யின் முழு கொள்ளளவில் நீர் இருப்பு செய்யப் பட்டு தொடர்ந்து நீர் வரத்து கண்காணிக்கப் பட்டு, வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித் தனர்.

;