திருப்பூர், ஏப்.12- உடுமலை நகராட்சி 19வது வார்டு நாகராஜன் வீதியில் கடந்த சில நாட்களாக பாதா ளச் சாக்கடை நிரம்பி, தெரு வோர சாக்கடைக்கு செல்கி றது. இதனால், அப்பகுதியில் வசிப்போர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடு மலை நகராட்சி 19வது வார்டு நாகராஜன் வீதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை நிரம்பி, தெருவோர சாக்கடைக்கு செல்கிறது. இதனால், அப்பகுதியில் வசிப்போர் கடும் அவதிப்படுகின்ற னர். வீதியில் நடந்து செல்லவே முடியவில்லை துர்நாற்றம் வீசுவதுடன், இரவில் கொசுத்தொல்லையும் பெருகி உள்ளது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடி யாக, பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி, கழிவுநீர் தேங்கா மல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.