பெற்றோர் இறந்ததால் கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய மாணவி கோரிக்கை
திருப்பூர், ஜூன் 13 - பெற்றோர்கள் இறந்துவிட்டதால் கூட்டுறவு வங்கியில் அவர்கள் பெற்ற கடனை ரத்து செய்ய வேண்டும் என 10ஆம் வகுப்பு மாணவி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுத் தார். இதில், இடுவாய் பாரதிபுரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் அவரது தந்தை இறந்துவிட்டார். இந்நிலையில் அவரது தாயார் திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கி யில் கடந்த ஆண்டு ரூ.5 லட்சம் கடன் பெற்று சொந்தமாக வீடு கட்டினார். அதன் கிரகப் பிரவேசத்திற்கு உறவினர்களை அழைக்க சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால் மகாலட்சுமி அவரது பாட்டியின் ஆதரவில் இருந்து வருகிறார். அவருக்கும் வயது முதுமை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு வங்கி மூலம் நாங்கள் பெற்ற கடன் ரூ.5 லட்சத்தை கட்ட முடியாத சூழலில் இருந்து வருகிறோம். எனவே எங்களது சூழலை கருத்தில் கொண்டு கூட்டுறவு வங் கியில் எங்களது பெற்றோர் வாங்கிய கடன் ரூ 5 லட் சத்தை தள்ளுபடி செய்ய மாவட்ட ஆட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் .அதுமட்டுமின்றி பெற்றோர்கள் ஆதரவின்றி இருக்கும் எனது கல்விக்கும் முதல்அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உதவி செய்ய வேண்டும் என மகாலட்சுமி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தண்ணீர் தேடி யானைகள்
திருப்பூர் ஜூன் 13- திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் ஒன்பதாறு சோதனை சாவ டியில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை, அமரா வதி வனச்சரகங்கள் உள்ளன. கோடை காலத்தில் தண்ணீர் தேடி யானைகள் மூணாறு சாலையை கடந்து அமராவதி அணைக்கு செல்வது வழக் கம். தற்போது கோடை காலம் முடிந்த நிலையிலும் மூணாறு சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் உலா வருகின் றன. குறிப்பாக புங்கன் ஓடை, எஸ்பெண்ட் உள்ளிட்ட இடங்க ளில் கூட்டம் கூட்டமாக யானைகள் நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் காத்திருந்து யானைகள் சென்ற பின் செல்கின்றனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் ஹாரன் அடிப்பது, வாகனங்களை நிறுத்தி செல்போனில் படம் பிடிப் பது, கூச்சலிடுவது என தொந்தரவு செய்யக்கூடாது.அமைதி காத்தால் சிறிது நேரத்தில் தானாகவே யானைகள் காட்டுக் குள் சென்று விடும். வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்தனர்.
நேந்திர வாழை சாகுபடி
திருப்பூர் ஜூன் 13- திருப்பூர், மாவட்டம் அவிநாசி, சேவூர், உட்பட பல இடங்களில் அதிகமான பரப்பில், வாழை சாகுபடியில் விவ சாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த3 ஆண்டாக கொரோனா பாதிப்பால் நேந்திரன் வாழை வர்த்தகம் பாதித் தது. ஆனால் இந்தாண்டு, அதிகரித்திருக்கிறது. விவசாயிக ளிடம் இருந்து கிலோ 60 ரூபாய்க்கு நேந்திரன் வாழை கொள் முதல் செய்யப்படுகிறது.அறுவடை செய்யப்படும் நேந்தி ரன் வாழைக்காய், கேரளாவுக்கு, சிப்ஸ் தயாரிக்க பெருமள வில் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் மும்பை உள்ளிட்ட இடங்களுக்கும் நேந்திரன் வாழை அனுப்பி வைக்கப்படுகி றது. விவசாயிகள் கூறுகையில், கடந்த ஓரிரு ஆண்டாக விலையில்லாததால் வாழை விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்தாண்டு நல்ல விலை கிடைத்து வருகிறது என்றனர்.
தம்பதியை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை
திருப்பூர் ஜூன் 13- திருப்பூர் ராயபண்டாரம் வீதியில் வசித்துவரும் சங்க மேஸ்வரர் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகி யோர் இன்று மதியம் வீட்டில் தனியாக இருந்தபோது முகக்கவசம் அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் இவர்களை கட்டிவைத்து கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள் ளையடித்துச் சென்றுள் ளனர். 30 லட்சம் பணம் 40 பவுன் தங்க நகைகள் கொள்ளை போய் இருக் கலாம் என வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகா ரின் பெயரில் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி பாபு சம் பவ இடத்தில் விசாரணை. கைரேகை நிபுணர்கள் மற் றும் மோப்ப நாய் கொண்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
வாலிபர் தற்கொலை
திருப்பூர் ஜூன் 13- கடலூர் மாவட்டம் சிதம் பரத்தை அடுத்த சீர்காழி பேட்டையைச் சேர்ந்த ராமர் மகன் விஜயகுமார் (23). இவர் திருப்பூர் குப்பாண்ட பாளையம் பகுதியில் நண் பர்களுடன் தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். விஜயகு மார் ஒரு பெண்ணை காத லித்து வந்ததாகவும் அந்த பெண் தற்போது விஜயகு மாரிடம் சரிவர பேசுவ தில்லை என்றும் கூறப்படு கிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்த தாக தெரிகிறது. இந்நிலை யில் சனியன்று நண்பர் களுடன் சேர்ந்து இரவு மது அருந்தியுள்ளார். பின்பு அனைவரும் தூங் கிய பிறகு தூக்கிட்டு தற் கொலை செய்து கொண் டார். இதுகுறித்து வீரபாண்டி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.