அவிநாசி, டிச.11- அவிநாசி அருகே புதுப் பாளையம் பிரிவில் டேங் கர் லாரி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. கேரள மாநிலம் கொச்சி னிலிருந்து ஆயில் ஏற்றிக் கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, அவி நாசி புதுப்பாளையம் பிரிவு அருகே எதிர்பாராத வித மாக டேங்கர் லாரி சாலை யின் பக்கவாட்டுச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத் திற்கு விரைந்து வந்த அவி நாசி தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் பால சுப்பிரமணியம் தலைமை யிலான தீயணைப்புத் துறை யினர், லாரியில் சிக்கித் தவித்த ஓட்டுநர் கோவிந்த ராஜ் என்பவரை மீட்டு, அவிநாசி அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். மேலும், இதுகுறித்து அவிநாசி காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.